இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா? விஜய் சேதுபதியிடம் பார்த்திபன் நக்கல்..

Actor Parthiban teases Vijay Sethupathi

அரசியல்வாதியாக விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. நானும் ரவுடி தான் படத்தில் சிறந்த காம்பினேஷனாக அமைந்த விஜய் சேதுபதி, பார்த்திபன் இணை, இப்படத்திலும் இணைவது சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது.தெனாவட்டாக நிற்கும் பார்த்திபன் அருகில் பவ்யமாக நிற்கும் விஜய் சேதுபதி புகைப்படத்தை வெளியிட்டு அதற்குக் கீழ், நானும் ரவுடி தான், நீயும் ரவுடி தான்.

இன்னைக்கு உன் துக்ளக் தர்பார் எவ்வளவு பெரிய லெவல்ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு, "இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமாங்கிற ரேஞ்சுக்கு பவ்யமா கையை கட்டிக்கொண்டு நின்னா என்ன அர்த்தம்? உன் மாஸ்டர் பிளான் தான் என்ன?" எனப் பதிவிட்டுள்ளார்,துக்ளக் தர்பார் படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கிறது. கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.

You'r reading இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா? விஜய் சேதுபதியிடம் பார்த்திபன் நக்கல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கல்யாணம் என் பட்டியலில் இல்லை.. நடிகை ஓவியா ஓபன் டாக்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்