ஷங்கர் படத்தை பார்த்து பிரபாஸ் பட போஸ்டர் காப்பி? சரமாரி புகார்..

Prabhas Radhe Shyam first look a copy of several movie posters?

நடிகர் பிரபாஸ் நடிக்கும் 20வது படம் ராதே ஷியாம். இதில் ஹீரோயினாக புட்ட பொம்மா பாடல் புகழ் பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் டைரக்டு செய்கிறார். கடந்த 6 மாதமாக இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது.
பிரபாஸ், பூஜா ஹெக்டெ இருவரும் காதலில் மயங்கி ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்திருப்பது போல் அழகோவியமாக அமைக்கப்பட்டிருந்தது. அதை பிரபாஸ் ரசிகர்கள் வரவேற்று டிரெண்டிங் செய்து வந்தனர்.

ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் போஸ்டர் பற்றி எதிர்மறை கருத்துக்கள் வெளிவரத் தொடங்கின. இது பல படங்களின் போஸ்டரை காப்பியடித்து வடிவமைக்கப்பட்டிருப்பதாக புகார் கூறியதுடன் அந்த பாணியிலான போஸ்டரையும் பகிர்ந்தனர். விக்ரன் நடிக்க ஷங்கர் இயக்கிய ஐ, தெலுங்கு படம் கிரிஷுன் கான்சே, சஞ்ஜய் லீலா பன்சாலியின் ராம் லீலா போன்ற படங்களைப் போல் இருப்பதாகக் கூறினர். குறிப்பாக கான்ச் படத்தின் போஸ்டரின் அப்பட்டமான காப்பி என்று நெட்டிஸன்கள் தெரிவித்திருக்கின்றனர். இதையறிந்து பிரபாஸ் அப்செட் ஆனாராம். சீக்கிரமே வித்தியாசமான புதிய போஸ்டரை வெளியிடும் படி இயக்குனரிடம் தெரிவித்திருக்கிறாராம்.

You'r reading ஷங்கர் படத்தை பார்த்து பிரபாஸ் பட போஸ்டர் காப்பி? சரமாரி புகார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கவர்ச்சி நடிகையை காக்க வைத்த ராசி கண்ணா.. ரகசியங்களை வெளியிட திட்டம்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்