மெகா ஸ்டார் மருமகனுக்கு கொரோனா டெஸ்ட்... சீனியர் நடிகர்கள் ஷூட்டிங் வர மறுப்பு..

Chiranjeevis son-in-law and actor Kalyaan Dhev COVID 19 Test,

மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகள் ஸ்ரீஜா. மருமகன் கல்யாண் தேவ். இவரும் நடிகர் தான். சூப்பர் மச்சி என்ற படத்தில் கல்யாண் தேவ் ஹீரோவாக நடிக்கிறார். இது இவர் நடிக்கும் 2வது படம். காதல் கதையாக உருவாகும் இப்படத்தைப் புலி வாசு இயக்குகிறார். ரச்சிதா ராம் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராஜேந்திர பிரசாத், நரேஷ், போசானி முரளி கிருஷ்ணா, பிரகதி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எஸ் தமன் இசை அமைக்கிறார்.


சமீபத்தில் ஆந்திரா, தெலங்கானாவில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க அரசுகள் அனுமதி அளித்தன. முதல் படமாக சூப்பர் மச்சியின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இதில் கல்யாண் கலந்து கொண்டார். சில நாட்களியே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். கொரோனா தொற்று இருக்குமோ என்று அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து தனிமைப்படுத்தல் முடிவை எடுத்தார். பிறகு பரிசோதனை செய்து கொண்டார். ஒரு வாரத்துக்கும் மேலாகத் தனிமையில் இருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார். மனைவி ஸ்ரீஜா மற்றும் குழந்தையை கட்டிப்பிடித்து செல்பி பகிர்ந்தார்.

படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே தனிமையில் இருந்தேன், கோவிட் பரிசோதனையில் தொற்று இல்லை எனத் தெரிந்தது. எனது குடும்பத்தினரை மீண்டும் கட்டிப்பிடிக்க நான் காத்திருந்தேன் என இன்ஸ்டாகிரமில் மெசேஜ் வெளியிட்டிருக்கிறார் கல்யாண்.
தமிழ்ப் படப் படப்பிடிப்புகள் தொடங்குவதற்கு முன்பே தெலுங்கு படப் படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் சீரடையாத நிலையில் பலரும் படப்பிடிப்பைத் தொடங்காமல் இருக்கின்றனர். சீனியர் நடிகர்கள் பலரும் நிலைமை சீரடைந்த பின்னரே படப் பிடிப்புக்கு வரமுடியும் என்று கூறியிருப்பதால் படப்பிடிப்பு முழுமையாக எப்போது நடத்துவது என்று தெரியாமல் இயக்குனர்கள். தயாரிப்பாளர்கள் கையை பிசைந்து நிற்கின்றனர்.

You'r reading மெகா ஸ்டார் மருமகனுக்கு கொரோனா டெஸ்ட்... சீனியர் நடிகர்கள் ஷூட்டிங் வர மறுப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் முழு ஊரடங்கு.. அனைத்து கடைகளும் மூடல்.. வெறிச்சோடிய சாலைகள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்