தமிழ் படங்களுக்கு சித்திரம் பேசுதடி ஹீரோயின் முழுக்கு..

Actress Bhavana hereafter wont Accept Tamil films

மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாவனா. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தார். நல்ல விமர்சனம் பெற்றார். அடுத்து ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடித்துள்ளார். திடீரென்று தமிழ்ப் படங்களுக்கு டாட்டா காட்டிவிட்டு மீண்டும் மலையாள படங்களில் நடிக்கச் சென்றார். அங்கிருந்தபடி கன்னட தயாரிப்பாளர் நவீனை காதலித்து மணந்தார். தற்போது கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2018ம் ஆண்டு தமிழில் வெளியாகி ஹீட் ஆன படம் 96. விஜய் சேதுபதி, திரிஷா நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஆண்டு கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக் ஆனது. திரிஷா தமிழில் ஏற்ற பத்திரத்தைக் கன்னடத்தில் பாவனா ஏற்று நடித்தார். படம் வெளியாகி ஹிட் ஆனதுடன் பாவனாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது பஹஜரன்கி 2 என்ற கன்னட படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் பாவனா நடித்திருக்கிறார். இதில் ஹீரோ சிவராஜ் குமார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் ஒடிடி தளத்தில் வெளியானது, அதில் பாவனாவின் கேரக்டருக்கு தனிப்பட்ட முறையில் பாராட்டுகள் குவுகிறதாம்.

தற்போது கன்னடத்தில் தனக்கென ஒரு இடத்தை பாவனா பிடித்திருப்பதுடன் அங்குள்ள நடிகைகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இனி தமிழ் படத்தில் பாவனா நடிப்பாரா என்றால் அதற்கு தற்போதைக்கு இல்லை என்று தான் பதில் வருகிறது. ஏற்கனவே ஒரு சில படங்களில் நடிக்கக் கேட்டு சில இயக்குனர்கள் அணுகிய போது அவர் நடிக்க மறுத்து விட்டாராம். கடைசியாக அவர் தமிழில் 2010ம் ஆண்டு அசல் படத்தில்தான் நடித்தார். பாவனா தமிழில் நடித்துச் சரியாக 10 வருடம் ஆகிவிட்டது.

You'r reading தமிழ் படங்களுக்கு சித்திரம் பேசுதடி ஹீரோயின் முழுக்கு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - யாருக்கு மூடுவிழா: சினிமா அரங்குகளுடன் மோதும் ஓடிடி டிஜிட்டல் தளங்கள்..! காத்திருக்கும் ஹீரோக்கள், ஹீரோயின்கள் பரபரப்பு கருத்து

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்