நடிகைக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்த விஜய் பட நடிகையால் பரபரப்பு..

Nithya Manans kiss scene with a girl goes viral

தளபதி விஜய் நடித்த மெர்சல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நித்யா மேனன். ஓகே கண்மணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கதை கேட்டுப் பிடித்திருந்தால் தான் நடிப்பார். கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரமாட்டார் என்று அவரைப் பற்றிக் கூறுவதுண்டு. அப்படிப்பட்ட நித்யா மேனன் லிப் லாக் காட்சியில் நடித்திருக்கிறார் என்றால் பரபரப்புதானே.

நித்யா மேனன் தற்போது பிரீத் என்ற வெப் சீரீஸில் நடித்து வருகிறார். இது வித்தியாசமான கதைக் களம் கொண்டது. இதற்கு முன் செய்யாத வேடம் ஏற்று நடிக்கிறேன் என்றெல்லாம் இந்த கதாபாத்திரம் பற்றி நித்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார். அடுத்த சில நாளில் அவர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்திருக்கிறார். இந்த வெப் சீரிஸில் நடிகை ஒருவருக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்து அதிர வைத்திருக்கிறார் நித்யா. அக்காட்சி நெட்டில் வைரலாகி வருகிறது.நித்யா ஏற்கனவே ஆவ் என்ற தெலுங்கு படத்தில் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்ததுடன் நடிகைக்கு முத்தம் தரும் காட்சியில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது பெரிதாக வெளியில் தெரியவில்லை தற்போது பிரீத் வெப் சீரிஸில் அவர் முத்தம் கொடுத்து நடித்திருக்கும் காட்சி வைரலாகி உள்ளது.

You'r reading நடிகைக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்த விஜய் பட நடிகையால் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தற்கொலை செய்த நடிகருக்கு உருகி உருகி காதல் கடிதம் எழுதிய நடிகை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்