பிரபல நடிகர்- மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி..

Dhruva Sarja Tested positive for COVID-19

நடிகர் அர்ஜூனின் மருமகன் சிரஞ்சீவி சார்ஜா . கடந்த 2 மாதத்துக்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இளம் வயதிலேயே அவர் மரணம் அடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவரது தம்பி துருவா சார்ஜாவுக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து துருவா சார்ஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது.என் மனைவிக்கும் ,எனக்கும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் தெரியவந்தது.

இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுகிறோம். விரைவில் குணம் அடைந்து திரும்பி வருவோம் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன். எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டுகிறேன். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.
துருவா சார்ஜா கன்னடத்தில் அட்டுரி, பஹதுர், பஹர்ஜரி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கன்னட சிவகார்த்திகேயன் என்று இவரை ரசிகர்கள் அழைக்கின்றனர். விரைவில் கோலி சோடா விஜய் மில்டன் இயக்கும் படத்தில் துருவா சார்ஜா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading பிரபல நடிகர்- மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகைக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்த விஜய் பட நடிகையால் பரபரப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்