மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஷால்.. காமராஜர் பிறந்ததின வாழ்த்தை நீக்கினார்..

Actor Vishal Delete Kamarajar Birthday Message

நடிகர் விஷால் கடந்த வருடங்களில் சினிமா மற்றும் அரசியலில் தடாலடியாக பல நகர்வுகளை நிகழ்த்தி வந்தார். நடிகர் சங்க பொது செயலாளராக இருந்த படியே தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் இருந்து வந்தார். அதே வேகத்தை அரசியலிலும் காட்டினார். ஆர்.கே,நகரில் தேர்தல் நடந்தபோது வேட்பு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விண்ணப்பம் முழுமையாக இல்லை என்று அதிகார்கள் நிராகரித்தனர். இதை அறிந்து நேரடியாக வேட்பு மனு தள்ளுபடி செய்த அதிகாரியிடமே சினிமா பாணியில் சென்று நியாயம் கேட்டார். அரசுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்தார்.

இந்நிலையில் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழுவை புகாரின் அடிப்படையில் அரசு கலைத்தது, நடிகர் சங்க தேர்தல் நடந்தும் வாக்கு எண்ணிக்கை நடத்த முடியாமல் தடை பெறப்பட்டது. இவைகளை எதிர்த்து விஷால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்நிலையில் மிஷ்கின் படத்தில் அவருடன் மோதல் போக்கு ஏற்பட்டது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெற்றி பெற்ற துப்பறிவாளன் படம் வெற்றி பெற்றது. அதன் 2ம் பாகம் உருவானதும் மிஷ்கின் இயக்க விஷால் நடித்தார். இந்நிலையில் பைனான்ஸ் விவகாரத்தில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.இதையடுத்து அப்படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறினார். இயக்குனர் பொறுப்பை மிஷ்கினே ஏற்றுக்கொண்டார். மற்றொரு விவகாரமாக ஜிஎஸ்டி கட்டவில்லை என்று அதிகாரரிகள் விசாரணை நடத்தினர். தனது அலுவலத்தில் பணியாற்றிய பெண் காசாளர் சுமார் ரூ 45 லட்சம் அளவில் மோசடி செய்துவிட்டார் என விஷால் அலுவலக மேலாளர் போலீசில் புகார் அளித்தார். தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கி உள்ளார் விஷால்.

நேற்று காமரஜரின் 118வது பிறந்ததினம். அரசியல் தலைவர்கள் அவருக்கு புகழாரம் சூட்டினர். விஷாலும் தன் பங்குக்கு அவருக்கு புகழாரம் சூட்டி டிவிட்டரில் மெசேஜ் பதிவிட்டார். அதில், உங்களைப் போன்று யாராவது ஒருவரை எதிர்காலத்தில் பார்ப்போமா? என்று குறிப்பிட்டிருந்தார் . அது நெட்டில் பரவியது. யார் என்ன சொன்னார்களோ தெரியவில்லை சிறிது நேரத்தில் விஷால் அந்த பதிவை நீக்கி விட்டு,மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்தவர் இவர்தான்.. இன்றுவரை நாங்கள் உங்களை இழந்து நிற்கிறோம்.. பிறந்த நாள் வாழ்த்துகள் காமராஜ் அய்யா என புதிய மெசேஜ் பகிர்ந்தார்.காமராஜர் பற்றி விஷால் முதலில் வெளியிட்ட டிவிட் மெசேஜை பலர் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

You'r reading மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஷால்.. காமராஜர் பிறந்ததின வாழ்த்தை நீக்கினார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இளையராஜா அண்ணன் மகன் காலமானார்.. படம் இயக்கி வந்த பாவலர் மைந்தன்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்