வனிதா, சூர்யா தேவி நேருக்கு நேர் சந்திப்பு.. 3 மணி நேரம் வாக்கு வாதம்..

Vanitha and Surya Devi meet face to face at the police station ..

நடிகை வனிதா டி.வி. சீரியல் தயாரிப்பாளர் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக பீட்டர் பாலின் முதல் மனைவி வடபழனி போலீசில் புகார் அளித்தார். வனிதா, பீட்டர் பால் திருமணம் சட்டப்படி செல்லாது, என்னிடம் விவாகரத்து பெறாமல் திருமணம் செய்திருக்கிறார். இதுபற்றி விசாரிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் வனிதா திருமணம் பற்றி சூர்யா தேவி என்பவர் யூ டியூபில் கடுமையாக விமர்சித்தார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வனிதா விருகம்பாக்கம் போலீஸில், சூர்யா தேவி மீது புகார் அளித்தார். என் பெயரைக் கெடுக்கும் வகையில் அவதூறாக சூர்யா தேவி பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் போதைப் பொருள் விற்பவர். அது பற்றியும் விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து சூர்யா தேவி, வனிதா மீது வடபழனி போலீசில் பதில் புகார் அளித்தார். அதில், வனிதா என் மீது ஆதாரம் இல்லாமல் போதைப் பொருள் விற்பதாகப் பழி சுமத்துகிறார். என் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகிறார். அவரை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணைக்கு வரும்படி வனிதாவை போலீஸார் அழைத்திருந்தனர். வனிதா நேற்று போலீஸ் நிலையம் வந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தனர். பின்னர் சூர்யா தேவி போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார். இருவரிடமும் சுமார் 3 மணி நேரம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் இருவருக்கும் சமாதானம் ஏற்படவில்லை, அது வாக்குவாதமாக நீடித்தது போல் தெரிகிறது.

பின்னர் வெளியில் வந்த வனிதா கூறும்போது,நான் சமாதானமாகப் போக எண்ணியிருந்தேன். ஆனால் அவர் அதற்கு உடன்படவில்லை போலீசாரும் சமரசத்துக்கு எவ்வளவோ முயற்சித்தும் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்று கூறினார். இருவரும் சமாதானமாகாததைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்குள் மோதல் போக்கு நீடிக்கும் இருதரப்பிலும் மாறி மாறி குற்றம் சுமத்துவார்கள் என்றும் தெரிகிறது.

You'r reading வனிதா, சூர்யா தேவி நேருக்கு நேர் சந்திப்பு.. 3 மணி நேரம் வாக்கு வாதம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமிதாப், ஐஸ்வர்யாராய் குணம் அடைய இந்தியா முழுவதும் தொடர் யாகம்.. இணைய தள பக்கத்தில் பிக் பி உருக்கம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்