பிரபல நடிகர் திருமணம் கொரோனா லாக் அப்பில் உறுதியானது..

Actor Nithin weds Shalini on 26th July

தமிழில் ஜெயம் ரவி நடித்த படம் ஜெயம் முன்னதாக இப்படம் ஜெயம் என்ற பெயரில் தெலுங்கில் உருவாகி வெற்றி பெற்றது. அதில் நிதின் ஹீரோவாக நடித்திருந்தார். பின்னர் நவீன் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்தார். அவருக்கு குடும்பத்தினர் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஷாலினி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்தை வெகு விமர்சையாக துபாயில் நடத்த நவீன் திட்டமிட்டார் ஆனால் கொரோனா ஊரடங்கால் அது நடக்கவில்லை.

பின்னர் ஐதராபாத்திலேயே ஊரடங்கிற்குப் பிறகு தடபுடலாகத் திருமணம் நடத்த எண்ணினார்.ஆனால் ஊரடங்கு முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை. திருமணத்தை மீண்டும் தள்ளிவைக்க வேண்டாம் என குடும்பத்தினர் முடிவு செய்ததையடுத்து தற்போது ஜூலை 26ஆம் தேதி ஐதராபாத்தில் நிதின் மற்றும் ஷாலினி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த திருமணத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மிகவும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. நிதின் - ஷாலினி திருமண தேதி வெளியானதை அடுத்து நிதின் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர், நடிகர் நிதின் தற்போது ராங்டே என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும், கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தை வெங்கி என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You'r reading பிரபல நடிகர் திருமணம் கொரோனா லாக் அப்பில் உறுதியானது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புதிய படத்தில் பாகுபலி ஹீரோவுக்கு ஜோடியாகும் பாலிவுட் ஹீரோயின்.. கோடிகளில் கொட்டும் சம்பளம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்