அர்ஜூன் மகள், நடிகை ஐஸ்வர்யாவுக்கு கொரோனா? தனிமைப்படுத்தி கொண்டார்..

Acotr Arjun Daughter Aiswariya has turned positive for COVID 19

தமிழில் பட்டத்து யானை, சொல்லி விடவா படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா. இவர் பிரபல நடிகர் அர்ஜூன் மகள் ஆவார். ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்களாம்.

பாலிவுட்டில் சமீபத்தில் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் சீரான உடல் நிலையில் இருப்பதுடன் உடல்நிலை வேகமாகக் குணம் அடைந்து வருவதாகவும் இவர்களில் அமிதாப், அபிஷேக் இருவரும் ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.நடிகர் அர்ஜுன் மகளுக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்களா? இல்லையா? என்பது பற்றி தகவல் எதுவும் இல்லை.

You'r reading அர்ஜூன் மகள், நடிகை ஐஸ்வர்யாவுக்கு கொரோனா? தனிமைப்படுத்தி கொண்டார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் மோதல்.. ஒருமையில் பேசி விரட்டிய நடிகை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்