ஆணாக மாறிய பிரபல நடிகை.. அவரே போட்டோ வெளியிட்டு ரகளை..

Actress kushboo Sudeenly Transfored as Man

திரைப்படங்களில் ரஜினி முதல் அனைத்து நடிகர்களும் ஏதாவது காட்சியில் பெண் வேடம் அணிந்து நடித்திருக்கிறார்கள். ஆனால் எல்லா நடிகைகளும் ஆண் வேடம் அணிந்து நடித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அப்படி நடித்தாலும் நடிக்கா விட்டாலும் தற்போது டிஜிட்டல் தளம் அவர்களுக்கான வாய்ப்பை அளித்திருக்கிறது. திடீரென்று குஷ்புவுக்கு ஆண் ஆகிப்பார்த்தால் என்ன என்று தோன்றவே ஃபேஸ் ஆப் மூலம் தனது முகத் தோற்றத்தை ஆணாக மாற்றி அதை அவரே டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதற்கு அவரே கமெண்ட்டும் பகிர்ந்திருக்கிறார். ஒருவேளை நான் ஆணாக பிறந்திருந்தால் கூட அழகாகத் தான் இருந்திருப்பேன் எனச் சொல்லிச் சிரிப்பு இமோஜிக்களை தெறிக்க விட்டிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஃபேஸ் ஆப் செயலி அறிமுகமான போது பலரும் அதை வைத்து விளையாடினார்கள். கிரிக்கெட் வீரர்கள் முதல் பல பிரபலங்களை ஆணாகவும் பெண்ணாகவும். இளமையாகவும், முதுமையாகவும் மாற்றி வெளியிட்டு காமெடி நடத்திக் கொண்டிருந்தார்கள் நெட்டிஸன்கள்.நடிகை குஷ்புவைப் பொறுத்தவரை நடித்தோமா வீட்டுக்குப் போனோமா என்றில்லாமல் பொது வாழ்க்கையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அரசியலில் இணைந்து பணியாற்றி வருவதுடன், சினிமா, டிவி சீரியல், கோடீஸ்வரி போன்ற ஷோக்கள் என நடத்தியும் சினிமா தயாரிப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்தி வருகிறார். தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். இப்படத்தைச் சிவா இயக்கி வருகிறார்.

You'r reading ஆணாக மாறிய பிரபல நடிகை.. அவரே போட்டோ வெளியிட்டு ரகளை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பண்ணை வீட்டில் சூப்பர் ஸ்டார் வாக்கிங்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்