வருங்கால கணவருடன் சினிமா பாணியில் கட்டி அணைத்து நடிகை போஸ்..

Actress Miya George gearing up for a wedding with a Businessman Ashwin Philip

இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து. ரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் மியா ஜார்ஜ். தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து வந்த மியாவுக்கு அங்கும் பட வாய்ப்புகள் குறைந்தன. இந்நிலையில் மியாவுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

மியாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வின் பிலிப்ஸ் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருக்கிறது, திருமணம் முடிவானதையடுத்து இருவரும் அவ்வப்போது டேட்டிங் செல்கின்றனர். மலையாளத்தில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு இருவரும் ஜோடியாக போஸ் அளித்தனர். இதில் வருங்கால கணவரை சினிமா பாணியில் கட்டிப் பிடித்து போஸ்கொடுத்தார் மியா.அதைப்பார்த்து மியாவுக்கு ரசிகர்கள், நடிகர், நடிகைகள் வாழ்த்து பகிர்ந்தனர். அதற்குத் தனது இணைய தள பக்கத்தில் உங்களுடைய அன்புக்கும் பிரார்த்தனைக்கும் எனது நன்றி எனத் தெரிவித்திருக்கிறார் மியா.

You'r reading வருங்கால கணவருடன் சினிமா பாணியில் கட்டி அணைத்து நடிகை போஸ்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காத்திருந்த நடிகரின் கல்யாணம் ஸ்டார் ஓட்டலில் நடந்தது.. கொரோனா கட்டுப்பாட்டுடன் டும் டும்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்