போலீஸ் அதிகாரி எழுதிய புத்தகத்தை தழுவி கடத்தல் வீரப்பன் வெப் சீரிஸ்..

Santhana Veerappan Web Series Story By Ex ADGP Vijayakumar

நடிகர் துருவ் விக்ரமின் முதல் படமான ஆதித்ய வர்மா படத்தைத் தயாரித்து வெற்றி பெற்ற E4 என்டர்டெயின் மென்ட் நிறுவனம், ஏற்கெனவே இஷ்க் (ISHQ) போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை மலையாளத்தில் அளித்திருக்கிறது. தற்போது சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றி முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில் படைப்புகளைத் தயாரித்து வெளியிடவிருக்கிறது.

இந்த இரு படைப்புகளும் சேஸிங் தி பிரிகண்ட் (Chasing the Brigand) என்ற தலைப்பில் முன்னாள் ஏஜிடிபி விஜய குமார் ஐ.பி.எஸ். எழுதிய பரபரப்பான புத்தகத்தில் இருக்கும் உண்மைச் சம்பவங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். எங்கள் மீது நம்பிக்கை வைத்து, தம்முடைய புத்தகத்தின் அடிப்படையில் திரைப்படம் தயாரிக்க அனுமதி அளித்ததற்காக, தற்போது மத்திய அரசு உள்துறை அமைச்சகத்தில் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் விஜயகுமார் அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். விஜயகுமார் ஜம்மு மற்றும் காஷ்மீர் கவர்னருக்கு ஆலோசகராகவும் பணிபுரிந்தவர். இந்தப் படைப்புகளில் பணியாற்றும் நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் பற்றிய விவரங்கள், ஊரடங்கு முடிந்ததும் வெளியிடப்படும் எனத் தயாரிப்பாளர் முகேஷ் மேதா தெரிவித்தார்.

You'r reading போலீஸ் அதிகாரி எழுதிய புத்தகத்தை தழுவி கடத்தல் வீரப்பன் வெப் சீரிஸ்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நெட்டில் லீக் ஆன ரஜினியின் அண்ணாத்த பட கதை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்