ஹர்பஜன் சிங், லாஸ்லியா ஸ்பெஷல் ஃபிரண்ட்ஷிப் வீடியோ.. திடீர் வெளியீடு..

Harbhajan Singh and Losliyas Friendship special Video

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் படம் 'ஃபிரெண்ட்ஷிப்'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இவர் கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். மேலும் நடிகர் அர்ஜூன், சதீஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.ஜான் பால் ராஜ் - ஷாம் சூர்யா இரட்டையர்கள் ஃபிரண்ட்ஷிப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் தயாரிக்கின்றனர், டி.எம். உதயகுமார் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் இருந்து ஃபிரெண்ட்ஷிப் டே ஸ்பெஷலாக கிளிம்ப்ஸ் (Glimpse) வீடியோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இப்படத்திற்காக சிம்பு பாடிய, சூப்பர் ஸ்டார் ஆன்தம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதற்காக ஹர்பஜன் சிங் சிம்புவுக்கு டிவிட்டரில் நன்றி சொன்னதுடன், சென்னையில் எனக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார் சென்னை வரும்போது உங்களைச் சந்திக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

https://youtu.be/FE76dL8QsfY

You'r reading ஹர்பஜன் சிங், லாஸ்லியா ஸ்பெஷல் ஃபிரண்ட்ஷிப் வீடியோ.. திடீர் வெளியீடு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இளம் ஹீரோ காதை கால் விரலால் கவ்விய நடிகை .. ஹாட் போஸுடன் ஃபர்ஸ்ட் லுக். ரொமான்ஸ்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்