கதாநாயகி இல்லாமல் கார்த்தி நடித்த படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்..

Karthis Kaithi Film got international Recognition

கதாநாயகி இல்லாமல் கார்த்தி நடித்த படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். கடந்த ஆண்டு இப்படம் விஜய் நடித்த பிகில் பட ரிலீஸ் ஆனபோது வெளியானது. ஆனாலும் தடுமாற்றம் இல்லாமல் அந்த படத்துக்கு டஃப் பைட் கொடுத்து ஓடியது. சில இடங்களில் பிகில் வசூலையும் கைதி மிஞ்சியது. இப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். அப்படம் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு திரைக்கு வரவுள்ளது.

சமீபகாலத்து படங்களில் கைதி தமிழ் திரையுலகில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதாக அமைந்தது. ஜெயில் கைதியாக நடித்த கார்த்தி தனது மகளைச் சந்திக்க வரும்போது நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது. கைதி படம் இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார்.இந்தியா முழுவதும் பாராட்டு பெற்ற கைதி படத்துக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. டொரோண்டோ சர்வதேச இந்தியத் திரைப் பட விழாவில் கைதி திரையிடத் தேர்வாகி உள்ளது.இது பற்றி லோகேஷ் கனகராஜ் கூறும்போது, ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை கைதி படம் டொரொண்டோ விழாவில் திரையிடப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

You'r reading கதாநாயகி இல்லாமல் கார்த்தி நடித்த படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமிதாப் பச்சனின் `உயிர் நண்பர்.. இந்திய அரசியலின் `தலால்.. யார் இந்த `அரசியல்வாதி அமர்சிங்?!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்