தன்னம்பிக்கை நாயகன்...நடிகர் லாரன்ஸ் வியந்து பாராட்டிய நபர் என்ன செய்தார் தெரியுமா?

Raghava Lawrence Wants to Help To self confident man

கொரோனா ஊரடங்கால் பலர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பலர் வேலை இழந்து வருமானம் இன்றி தவிக்கின்றனர். ஒரு சில துணை நடிகர்கள் வேலை இல்லாததால் தெருவில் காய் கறிக்கடை வைத்துப் பிழைப்பை ஒட்டி வருகின்றனர். ஒரு சிலர் நம்பிக்கை இழந்து தற்கொலை செய்திருக்கின்றனர்.வேலை இல்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்த இளைஞன் தற்போது 15பேருக்குத் தினமும் சாப்பாடு தரும் உருக்கமான வீடியோ வெளியாகி உள்ளது. அதைப் பார்த்து நெகிழ்ந்தார் நடிகர் ராகவா லாரன்ஸ். தனது இணைய தள பக்கத்தில் சைக்கிளில் டீ விற்கும் ஒரு இளைஞனின் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

அதில் அந்த இளைஞன் கூறும்போது, நான் வழிப்போக்கனாக இருந்து மதுரைக்கு வந்து பிச்சை எடுத்து தினமும் 150 ரூபாய் சம்பாதித்து அதில் 50 ரூபாய் செலவு போக மீதம் சேமித்த பணத்தில் டீ கன்டெய்னர் வாங்கி அதைச் சைக்கிளில் வைத்து தெருத் தெருவாகச் சென்று டீ விற்றுவருகிறேன். அதில் வரும் வருமானத்தை வைத்து தினமும் தெரு மற்றும் கோவில் அருகே அமர்த்திருக்கும் ஆதரவற்றவர்கள் 15 பேருக்குச் சாப்பாடு சமைத்துத் தருகிறேன்.

எனது லட்சியம் பெரிய அனாதை விடுதி ஒன்றைக் கட்டி அதில் ஆதரவற்றவர்களை வைத்து வாழ்நாள் முழுவதும் காப்பாற்ற வேண்டும் என்பதுதான். இறக்கத் தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்”என்று வீடியோ பகிர்ந்திருக்கிறார்.
இதுபற்றி ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள மெசேஜில்.இந்த இளைஞனின் தன்னம்பிக்கையை பார்க்கும் பொழுது வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட மனிதனுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும், இவருக்கு என்னால் முடிந்த உதவியாக 1 லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன்.யாரேனும் இவரது தொடர்பு கிடைத்தால் பகிரவும், நன்றி. “இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்”
எனத் தெரிவித்திருக்கிறார்.

You'r reading தன்னம்பிக்கை நாயகன்...நடிகர் லாரன்ஸ் வியந்து பாராட்டிய நபர் என்ன செய்தார் தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுகவில் இருந்து கு.க.செல்வம் பாஜகவுக்கு தாவுவது ஏன்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்