பாரதிராஜா உருவாக்கிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக போர்க்கொடி.. உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குக..

Tamil film producer council Send Report Against Bharthi raja

கடந்த 2 நாட்களுக்கு முன்பு டைரக்டர் பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு சங்கம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்குத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று அவசர கூட்டம் நடந்தது. பின்னர் பாரதி ராஜாவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கக் கேட்டு சங்கம் சார்பில் பத்திரப் பதிவுத் துறைத் தலைவருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு பத்திர பதிவுத்துறைத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:டைரக்டர் பாரதிராஜாவுடன் ஒரு சிலரும் சேர்ந்து 03. 08. 2020 அன்று தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்குவதாக அறிவித்து மேற்படி சங்கத்தைப் பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்துள்ளதாகவும் தினசரி பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி தங்களால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி சங்கத்தின் பொறுப்பை ஏற்றுச் சங்கத்தை நடத்தி வருகிறார். கடந்த காலத்தில் மாவட்ட பதிவாளரால் இந்த நிர்வாகத்துக்கு ஆலோசனை கூற பாரதிராஜா, டிஜி தியாகராஜன், டி சிவா உட்பட 9 பேர் நியமிக்கப்பட்டார்கள் அவர்களும் ஓராண்டு சங்க அலுவலகத்தில் அமர்ந்து சிறப்பு அதிகாரிக்கு ஆலோசனைகளை சொல்லி வந்தார்கள்.

இந்த நிலையில் சில தயாரிப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தேர்தல் நடத்த வேண்டும் என்று வைத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு ஓய்வுபெற்ற நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்களைத் தேர்தல் அதிகாரியாக நியமித்துத் தேர்தலை நடத்த உத்தரவிட்டது. தேர்தல் அதிகாரிகளும் தேர்தல் அட்டவணை அறிவித்துத் தேர்தல் வேலைகளைத் தொடங்கினார். எதிர்பாராத விதமாக கொரோனா பெரும் தொற்று வந்ததால் தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து சங்க வேலைகளைச் சிறப்பு அதிகாரி சிறப்பாக செய்து வருகிறார்.

தமிழக அரசு அறிவித்து தங்களால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி சரியாகச் செயல்படவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி மேலே குறிப்பிட்ட பாரதிராஜா உள்படச் சிலர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு விரோதமாக புதிய சங்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இது சங்க விதிப்படி விரோத நடவடிக்கையாகும் ஆகவே பாரதிராஜா மற்றும் அவருக்குத் துணையாக உள்ளவர்களையும் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

You'r reading பாரதிராஜா உருவாக்கிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக போர்க்கொடி.. உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குக.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுஷாந்த் தற்கொலை பரபரப்பு தொடரும் நிலையில் மற்றொரு இந்தி நடிகர் தற்கொலை.. மின் விசிறியிலிருந்து பிணமாக மீட்கப்பட்டார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்