மண்ணுக்கு மரம் பாரமா குடும்ப தத்துவ பாடலாசிரியர் காலமானார்..

Mannuuku Maram Barama Lyricist PKMuththusami Passes away today at the age of 97

பழம்பெரும் பாடலாசிரியர் பி.கே.முத்து சாமி (வயது 97 ). தமிழறிஞரான இவர் இன்று காலமானார். ஜாலியான மற்றும் காதல் பாடல்களும் வரைமுறையுடன் அந்தக்கால தமிழ்ப் படங்களில் வலம் வந்தது. வாழ்க்கைக்கு வளம் சேர்த்தது.1958ம் ஆண்டு வெளியான தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் இடம்பெற்ற மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா என்ற பாடல் வரிகளில் உள்ள வார்த்தைகள் வாழ்க்கையின் சுமைகளை ஒரு நொடியில் மாயமாக்கி விடும். இப்பாடலை எழுதியவர் பி.கே முத்துசாமி. நாமக்கல் மாவட்டம் ராசி புரம் ஆர்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் இவரை வெண்பா கவிஞர் என்று அழைப்பார்கள்.

`காவிரியின் கணவன் என்ற படத்தில் எழுதிய `சின்ன சின்ன நடை நடந்து, செம்பவள வாய் திறந்து, `பொன்னித் திருநாள் படத்தில் `கண்ணும் கண்ணும் கதை பேசி, ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து போன்ற பல பல்வேறு பாடல்கள் எழுதியுள்ளார். வயது முதிர்ச்சி காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் வீட்டிலேயே தங்கி இருந்து சிகிச்சை பெற்ற வந்தார், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். பி.கே. முத்துசாமி மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You'r reading மண்ணுக்கு மரம் பாரமா குடும்ப தத்துவ பாடலாசிரியர் காலமானார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமெரிக்க ஸ்காலர்ஷிப் புல்லட்டில் வந்த இருவர்!- ஈவ் டீசிங்கால் உயிரைப் பறிகொடுத்தாரா உ.பி பெண்?!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்