பிரபல நடிகைக்கு எதிராக யூடியூபில் ஆறு லட்சத்தை தாண்டி பறக்கும் டிஸ்லைக்.. இதுவரை இப்படியொரு எதிர்ப்பை சந்தித்ததில்லை..

Actress Alia Bhatts trailer gets 6 million dislikes in 24 hours

திரிஷா, நயன்தாரா, ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், எனப் பல ஹீரோயின்கள் ஹீரோவை ஓரம் கட்டிவிட்டு படங்களில் பிரதானமாக நடித்திருக்கிறார்கள். அந்த படங்களின் போஸ்டர்,பர்ஸ்ட் லுக், டிரெய்லர் பல வந்திருக்கின்றன. அவர்கள் யாருக்கும் இப்படியொரு எதிர்ப்பு வந்ததில்லை என்று கூறும் அளவுக்குப் பிரபல நடிகை ஒருவருக்கு யூடியூபில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவர் வேறுயாருமல்ல அலியா பட் என்ற நடிகை தான்.
அலியாபட், சஞ்சய் தத் நடித்திருக்கும் படம் சதக் 2. இந்தி படமான இதனை அலியாபட் தந்தை மகேஷ் பட் இயக்கி உள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது, அடுத்த 1 மணி நேரத்தில் ஒன்றரை லட்சம் டிஸ்லைக் வந்தது. நேரம் ஆக ஆக இது பெருகி 24 மணி நேரத்தில் ஆறு லட்சம் மில்லியன் டிஸ்லைக்குகள் தாண்டி பறந்துகொண்டிருக்கிறது. 6 மில்லியன் அதாவது 6 லட்சம் டிஸ்லைக் சதக் 2 பட டிரெய்லர் மீது காட்டப்பட்ட வெறுப்பில்லை, அதில் நடித்திருக்கும் அலியாபட் மீதான வெறுப்பு என்று கருதப்படுகிறது.இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் வாரிசு நட்சத்திரங்கள் அவரை இழிவுபடுத்தினார்கள் என்ற தகவல் கடுமையான விவாத பொருளானது. அதில் சுஷாந்த்தை அவமதித்தார் என்பதில் அலியா பட் பெயர் தான் அதிகமாக அடிபட்டது.

அப்போது அவருக்கு எதிராக சுஷாந்த் ரசிகர்கள் விட்ட டோஸ் அவரை சமூக வலைதளத்தைவிட்டே ஓட்டம் பிடிக்க வைத்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் தற்போது அவர் நடிப்பிற்கு கிடைத்திருக்கும் டிஸ்லைக்குகள், ஒரு பேட்டியில் சுஷாந்த்தை பற்றி கேட்ட போது, அவரை தனக்கு தெரியாது என்ற அலியா பட், சுஷாந்த் இறந்த பிறகு அதுபற்றி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்ற புகார் அவர் மீது கூறப்படுகிறது.தற்போது ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் அலியாபட் நடிக்க உள்ளார். இப்போதுள்ள எதிர்ப்பு அவருக்கு இப்படத்தில் நடிப்பதைச் சிக்கலாக்குமா என்பது போகப்போக தெரியும்.

You'r reading பிரபல நடிகைக்கு எதிராக யூடியூபில் ஆறு லட்சத்தை தாண்டி பறக்கும் டிஸ்லைக்.. இதுவரை இப்படியொரு எதிர்ப்பை சந்தித்ததில்லை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அடையாளம் தெரியாமல் இருக்க மாஸ்க்குடன் நடந்த ஹீரோவை சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கொரோனா லாக்டாவுனிலும் நெரிசலில் சிக்கி திணறல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்