சுதந்திர தினத்தில் ஒட்டு மொத்தமாக 65 பாடகர்கள் குரலில் ஒலிக்கும் தமிழா தமிழா.... ஏ. ஆர். ரகுமான் சூப்பர் ஹிட் பாடலில் ஒரு புதிய முயற்சி..

AR Rahamans Tamizha Tamizha Song Sung by 65 Singers in Five Languages

28 வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த தமிழா தமிழா என்ற சூப்பர் ஹிட் பாடல். இன்று இந்த பாடலை ஊரடங்கு சமயத்தில் 65 பாடகர்கள் ஒருங்கிணைந்து வீட்டில் இருந்த படியே ஐந்து மொழிகளில் பாடி உள்ளார்கள். அது சுதந்திர தினமான நாளை 5 மொழிகளில் ஒட்டு மொத்த குரலில் ஒலிக்க உள்ளது.யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) என்பது பிரபல பின்னணி பாடகர் ஶ்ரீநிவாஸால் உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் . இதில் இவருடன் இணைந்து பாடகர்கள் உன்னிகிருஷ்ணன் , சுஜாதா மோகன் , ராகுல் நம்பியார், ரஞ்சித் கோவிந்த் அறங்காவலர்களாக பொறுப்பேற்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கு நாளில் வாழ்வாதாரத்திற்காகக் கஷ்டப்படும் பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்களுக்கு நிதி திரட்டி உதவுவதே இந்த அமைப்பின் நோக்கம். எங்கள் அமைப்பின் முதல் முயற்சி “டுகெதர் அஸ் ஒன்” இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மோகன்லால் , மற்றும் யஷ் அவர்கள் ஆகஸ்ட் 15 -ஆம் நாள், காலை 11:00 மணியளவில் 2020 சுதந்திர தினத்தன்று வெளியிடுகிறார்கள். இதைத் தொடர்ந்து அமைப்பின் நோக்கத்திற்காக மக்களிடையே நிதி உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

பேரிடர் நேரங்களில் ஒற்றுமையைக் குறிக்கும் வகையில் அமைந்த இந்த பாடல் 28 வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த தமிழா தமிழா என்ற பிரபலமான பாடல். இன்று இந்த பாடலை ஊரடங்கு சமயத்தில் 65 பாடகர்கள் ஒருங்கிணைந்து வீட்டிலிருந்தபடியே ஐந்து மொழிகளில் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி) ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
யூ எஸ் சி டி (USCT) செப்டம்பர் மாதத்தில் உலக அளவில் நிதி திரட்டுவதற்காக ஆன்லைனில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்த உள்ளது.

You'r reading சுதந்திர தினத்தில் ஒட்டு மொத்தமாக 65 பாடகர்கள் குரலில் ஒலிக்கும் தமிழா தமிழா.... ஏ. ஆர். ரகுமான் சூப்பர் ஹிட் பாடலில் ஒரு புதிய முயற்சி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 80 படப்பிடிப்புகள், 150 நாள் முடக்கம் தொழிலாளிகள் பட்டினி.. நாளை ஷூட்டிங் அனுமதி தர பாரதிராஜா முதல்வருக்கு கடிதம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்