கமலின் பிறப்பு சிவப்பு, இருப்பு கறுப்பு.. வைரமுத்து அழுத்தமான கவிதை முத்தம்

Lyricist Vairamuthu Congratulate Kamal Haasan On 61 Year of film industry Service

நடிகர் கமல்ஹாசன் திரையுலகுக்கு வந்து 61 வருடங்கள் ஆகிறது. களத்தூர் கண்ணம்மா படத்தில் சிறுவனாக நடிக்கத் தொடங்கி எம்ஜிஆர், சிவாஜி என பெரும் நடிகர்களுடன் நடித்து கே,பாலசந்தரின் மோதிர கையில் குட்டுப்பட்டு தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து காதல் மன்னனாக, நடிப்பு சுடராகி, இயக்கம், நடனம், பாடகர், இசை என அனைத்து துறையிலும் அவர் கால் பதித்து இன்று உலகநாயகனாக உயர்ந்து நிற்கிறார். அத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி அதன் தலைவராகவும் அரசியல் பணியாற்றி வருகிறார்.

கமலின் 61 வருட திரையுலக பயணத்துக்குப் பாராட்டை அழுத்தமான கவிதையாகத் தந்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. அவர் கூறியிருப்பதாவது: பரமக்குடியின் அருமைக் கலைஞன். பிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு. மரபு கடந்த புதுக்கவிதை புரிதல் கடிது; புரிந்தால் இனிது. ஆண்டுகள் அறுபது காய்த்த பின்னும் நனிகனி குலுங்கும் தன்விருட்சம். கலைத்தாய் தன் நெற்றியில் மாற்றி மாற்றிச் சூடுவது திலகத்தையும் இவர் பெயரையும் கலையாக் கலையே கமல்.இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
கமல்ஹாசன் தனது நடிப்பு பயணத்தைத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறார். அடுத்து இந்தியன் 2, தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்கிறார்.

You'r reading கமலின் பிறப்பு சிவப்பு, இருப்பு கறுப்பு.. வைரமுத்து அழுத்தமான கவிதை முத்தம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுதந்திர தினத்தில் ஒட்டு மொத்தமாக 65 பாடகர்கள் குரலில் ஒலிக்கும் தமிழா தமிழா.... ஏ. ஆர். ரகுமான் சூப்பர் ஹிட் பாடலில் ஒரு புதிய முயற்சி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்