எஸ் பி பி குணம் அடைய 25 ஆயிரம் தொழிலாளர்கள் நாளை கூட்டு பிரார்த்தனை.. பெப்ஸி ஆர்.கே.செல்வமணி அறிக்கை..

FEFSI President RKSelvaman Statement Regarding Mass Prayer

கொரோனா தொற்று பாதிப்பால் சினிமா பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய வேண்டி பெப்ஸி தொழிலாளர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் நாளை பங்கேற்க வேண்டும் என்று தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளன ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விட்டிருக்கிறார்.இதுகுறித்து பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நமது மூத்த சகோதரர்‌, பாடகர்‌, இசையமைப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ ஆயுட்கால உறுப்பினர்‌, அன்புக்குரிய எஸ்.பி. பால சுப்பிரமணியம்‌ அவர்கள்‌, கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டுள்ளார்‌ என்பதை அறிந்து பெரும்‌|கவலை கொண்டுள்ளோம்‌. தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தின்‌ சார்பில்‌ அதனுடைய 25ஆயிரம்‌ உறுப்பினர்களும்‌, அவர்கள்‌ குடும்பங்களும்‌ பாடும்‌ நிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பூரண நலம்‌ அடைந்து நல்‌ ஆரோக்கியத்துடன்‌ விரைவில்‌ வர வேண்டும்‌ எனப் பிரார்த்தனை செய்கிறோம்‌.

மொழி பேதமின்றி, இன பேதமின்றி உலகெங்கும்‌ உள்ள இந்திய மக்களை தன்‌ கான குரலால்‌ மயக்கி வைத்த அந்த பாடும்‌ நிலா மயக்கம்‌ தெளிந்து மீண்டெழுந்து, அவரின்‌ இசைப் பயணத்தை மீண்டும்‌ தொடங்க வேண்டும்‌ என எல்லாம்‌ வல்ல இறைவனிடம்‌ பிரார்த்தனை செய்கிறோம்‌. அவர்‌ விரைவில்‌ நலம்‌ அடைய வேண்டும்‌ என பெப்ஸி சம்மேளனத்தில் அங்கம்‌ வகிக்கும்‌, அனைத்து உறுப்பினர்களும்‌ அவர்களின்‌ குடும்பத்தினரும்‌ நாளை மாலை 20.8.8030 அன்று வியாழக் கிழமை மாலை 6.00 மணி அளவில்‌ 5 நிமிடம்‌ பிரார்த்தனை செய்கின்றோம்‌. அவரவர்கள்‌ எங்கு இருக்கிறார்களோ, அந்த இடத்திலேயே பிரார்த்தனை செய்ய வேண்டும்‌ எனக் கேட்டுக்‌ கொள்கிறோம்‌. மேலும்‌ திரைப்படத்‌ துறையைச்‌ சேர்ந்த மற்ற சங்கத்தினரும்‌ எங்கள்‌ வேண்டுகோளை ஏற்று இந்த பிரார்த்தனையில்‌ கலந்து கொள்ள வேண்டும்‌ என அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

இவ்வாறு ஆர்,கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

You'r reading எஸ் பி பி குணம் அடைய 25 ஆயிரம் தொழிலாளர்கள் நாளை கூட்டு பிரார்த்தனை.. பெப்ஸி ஆர்.கே.செல்வமணி அறிக்கை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இறப்பதற்கு முன்னரே ஆறுதல் காட்டிக்கொடுத்த சு.சுவாமி- சுஷாந்த் மரணத்தில் வளைக்கப்படும் பிரபலம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்