பிரபல நடிகர், வீட்டு இளவரசி படத்தை பகிர்ந்து மகிழ்ச்சி..

GV Prakash Release Her Baby Image in his Twitter Page

தமிழில் அந்த காலத்தில் அதிக படங்களில் நடித்து வெள்ளிக் கிழமை நாயகன் என்று பெயரெடுத்தவர் ஜெய்சங்கர். அதாவது ஒவ்வொரு வெள்ளி கிழமையும் அவர் நடித்த புதிய படம் தியேட்டரில் வெளியாகும் என்பதால் இந்த பட்டப்பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது. அதுபோல் தற்போதைக்கு 9 படங்களில் நடிக்கும் நடிகராக இருக்கிறார் ஜீவி பிரகாஷ். லாக்டவுன் முடிந்தவுடன் இவர் படங்கள் வெள்ளிக்கிழமை நாயகன் என்று பெயரெடுக்கும் அளவுக்கு வாரம் ஒரு படத்தை ரிலீஸ் செய்யும் அளவுக்குத் தயாராக இருக்கிறார், தவிர சூரரைப் போற்று, தலைவி படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.

நடிகர் ,இசை அமைப்பாளர் ஜீவி பிரகாஷ், பாடகி சைந்தவியைக் கடந்த 2013ம் ஆண்டு மணந்தார். இவர்களுக்குச் சென்ற மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததைத் தெரிவித்தவர் குழந்தை படத்தை வெளியிடாமல் சஸ்பென்ஸ் வைத்து வந்தார். ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது தனது இணைய தள பக்கத்தில் குழந்தை படத்தை அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் படுத்திருப்பதுபோல் வெளியிட்டு இதோ எங்கள் இளவரசி என மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். அதைக் கண்ட ரசிகர்கள், குழந்தை ரொம்ப அழகு திருஷ்டி சுற்றிப் போடுங்கள் என்றும், உண்மையில் இளவரசிதான் எனவும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

You'r reading பிரபல நடிகர், வீட்டு இளவரசி படத்தை பகிர்ந்து மகிழ்ச்சி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மரணம்.. எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் இரங்கல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்