வசூல் தொடங்கவில்லை ஆனால் ரூ 100 கோடி அள்ளிய பிரபல ஹீரோ..

Suriyas Suraraippottru in National Trending

நடிகர் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஜிவி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இறுதிச் சுற்றுப் படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ஏர்டெக்கான் அதிபரின் வாழ்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது.தியேட்டர் ரிலீஸுக்காக காத்திருந்த நிலையில் கொரோனா தொற்று பயத்தால் இப்போதைக்கு தியேட்டர்கள் திறக்க முடியாது என்று அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து சூர்யா தனது படத்தை ஒடிடியில் வெளியிட முடிவு செய்தார். அதன்படி சூரரைப்போற்று படம் வரும் அக்டோபர் 30 ம் தேதி அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
சூர்யா ரசிகர்கள் சூரரைப் போற்று படம் 100 கோடிக்குப் பிரி பிஸ்னஸ் (ரிலீஸுக்கு முன் வர்த்தகம்) செய்திருப்பதாக டிரெண்டிங் செய்து வருகின்றனர். சூர்யா நடித்து அமேசான் பிரைமில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளிவர இருக்கும் சூரரைப்போற்று திரைப்படம் முன் வர்த்தகம் (Pre-Business) 100 கோடிக்கு மேல் நடந்துள்ளதாக சூர்யா ரசிகர்கள் தற்போது ஒரு ஹாஷ்டேக்
#SooraraiPottruHits100crPB என்று கிரியேட் செய்து சமூகவலைத்தளத்தில் இந்திய அளவில் டிரெண்டிங் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இப்படத்தை அடுத்து சூர்யா பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.

You'r reading வசூல் தொடங்கவில்லை ஆனால் ரூ 100 கோடி அள்ளிய பிரபல ஹீரோ.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா ஊரடங்கு செப்டம்பரிலும் நீடிக்குமா.. இன்று மாலை அறிவிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்