பொன்னியின் செல்வன்-ல் ஐஸ்வர்யா ராய் யாருக்கு ஜோடின்னு கேட்டா ஆச்சர்யப்படுவீங்க.. மணிரத்னம் நடத்திய குலுக்கலில் பிரபல இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்..

Do You know Who is Aiswariyarais Pair in Ponniyin Selvan

சரித்திர படமாக உருவாகிறது கல்கியின் பொன்னியின் செல்வன் இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பதும், படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டதும், இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஜெயம் ரவி , கார்த்தி நடித்த காட்சிகள் படமாகி இருக்கிறது. இதில் புதிய வேடத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.

கதைப்படி பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் ஆகிய இரண்டு வேடங்களில் சரத்குமார், பிரபு நடிப்பதாக இருந்தது. பிரபுவுக்கு ஜோடியாக நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யாராய் நடிக்கவிருந்தார். தற்போது இந்த காம்பினேஷனை மணிரத்னம் குலுக்கி போட்டிருக்கிறாராம். அதன்படி பிரபு, சரத்குமார் இருவருக்கும் வேறு முக்கிய வேடங்களுக்கு மாற்றப்பட்டு, பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடங்களில் பாலாஜி சக்திவேல் மற்றும் நிழல்கள் ரவி நடிக்க இருக்கிறார்களாம்.

பெரிய பழுவேட்டரையர் மனைவியாக ஐஸ்வர்யாராய் நடிப்பதால், பாலாஜி சக்திவேலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிப்பார் என்று தெரிகிறது. மணிரத்னம் குலுக்கியிருக்கும் இந்த குலுக்கலில் பாலாஜி சக்திவேல் ஐஸ்வர்யாராய் என்ற ஜாக்பட்டை தனக்கு ஜோடியாக்கி இருக்கிறார். ஆனால் இதுதான் இறுதியா அல்லது மீண்டும் மணிரத்னம் மறுகுலுக்கல் நடத்துவாரா என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியுமாம்.

You'r reading பொன்னியின் செல்வன்-ல் ஐஸ்வர்யா ராய் யாருக்கு ஜோடின்னு கேட்டா ஆச்சர்யப்படுவீங்க.. மணிரத்னம் நடத்திய குலுக்கலில் பிரபல இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நீ பாதி நான் பாதி திருமணத்திற்குப் பின் மனைவியின் பெயரை பின்னால் சேர்த்த வாலிபர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்