திரைத்துறையில் களமிறங்கும் ஷாருக்கானின் மகள்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் கதாநாயகியாகி நடிக்கப்போவதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சினிமாவின் அடுத்த தலைமுறையாக, பிரபல நடிகர் நடிகர்களின் வாரிசுகள் திரைத்துறையில் களமிறங்கி வருகின்றன. தமிழில், மீனாவின் மகள் முதல் விக்ரமின் மகன் வரை திரைப்படங்களில் நடிக்கின்றனர். இதுபோல், பாலிவுட்டில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜானவி ‘தடக்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த வரிசையில், பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானின் மகள் சுகானா கதாநாயகியாக விரைவில் நடிக்க இருக்கிறார். கல்லூரியில் படித்துக் கொண்டே மாடலிங் செய்து வரம் சுகானாவுக்கு தற்போது 17 வயது ஆகிறது. இத்துடன் நடிப்பு, நடன பயிற்சிகளும் செய்து வருகிறார்.

இந்நிலையில், சுகானாவுக்கு நடிப்பு மீது ஆர்வம் வந்துள்ளதால், தந்தை ஷாருக்கான் மூலம் கதை கேட்டு வருவதாகவும், விரைவில் அவர் கதாநாயகியாக பாலிவுட்டில் வலம் வருவார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில், படம் ஒன்றில் அவர் ஒப்பந்தமாகி உள்ளார் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading திரைத்துறையில் களமிறங்கும் ஷாருக்கானின் மகள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பட்ஜெட்டில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு 1,789 கோடி ரூபாய்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்