விஷ்ணு பட வில்லனுக்கு தெலுங்கில் நடிக்க வந்த வாய்ப்பு.. கோட்டு சூட் அணிந்து கெத்து காட்டுகிறார்..

Vishnus vennila kabadi kuzhu Actor Nithish Veera acting in telugu asuran

சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு வெற்றிப் படமாக அமைந்தது. அதே நேரத்தில் அப்படத்தில் நடித்த விஷ்ணு விஷால், சூரி, அப்புக்குட்டி எனப் பலருக்குத் திரையுலகில் நல்லதொரு இடம் கிடைத்திருக்கிறது. அதே படத்தில் விஷ்ணுவின் கபடி குழுவில் அடிக்கடி முறைப்பு காட்டுபவராக வில்லன் அம்சமுள்ள வேடத்தில் நடித்தவர் நிதிஷ் வீரா. அவரும் சத்தமில்லாமல் வரிசையாகப் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது தெலுங்கு அசுரன் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

தனக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் எதார்த்தம் மிகுந்த தனது தனித்துவமான நடிப்பால் எளிதில் பலரையும் கவர்பவராக மாறியிருக்கிறார் நடிகர் நிதிஷ் வீரா. புதுப்பேட்டைப் படத்தில் மணியாகவும், வெண்ணிலா கபடி குழு படத்தில் சேகராகவும் நடித்துப் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டைப் பெற்றார்.தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்திலும், அறம் பட இயக்குனர் கோபி நயினார் இயக்கும் கோல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் புஷ்கர் காயத்ரி இயக்கும் வெப் சீரியஸிலும் நடிக்கின்றார்.

அசுரன் படத்தின் தெலுங்கு பதிப்பில் தமிழில் நடித்த அதே வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சில பெயரிடப்படாத புதிய படங்களிலும் நடிக்கவுள்ளார். எப்போதும் கிராமத்து வாலிபர் போல் யதார்த்தமாகக் காணப்பட்ட நிதீஷ் வீரா திடீரென்று கோட் சூட் உடையில் எடுத்த போட்டோஷூட் படங்களை நெட்டில் வெளியிட அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. நிதிஷ் வீராவிற்கு ஸ்டைலிஷான நடிகராகவும் நடிக்க வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது என அவரது தரப்பில் கூறப்படுகிறது.

You'r reading விஷ்ணு பட வில்லனுக்கு தெலுங்கில் நடிக்க வந்த வாய்ப்பு.. கோட்டு சூட் அணிந்து கெத்து காட்டுகிறார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் பாடலுக்கு ரசிகரான சூப்பர் ஸ்டார். சிவகார்த்திகேயன் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்