எஸ்பிபிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை..? டாக்டர்கள் புதிய திட்டம்..

Speculation about Lung transplantation for SP Balasubramaniam

திரைப்பட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கவலைக்கிடமான நிலைக்குச் சென்ற அவர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று நெகடிவ் ஆகி இருக்கிறது என மகன் எஸ்பிபி சரண் நேற்று தெரிவித்தார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஐ பேடில் கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளை கண்டு களிக்கிறார். ஐபில் தொடங்க உள்ளது அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். எழுதுவதன் மூலம் தேவைகளைத் தெரிவிக்கிறார். ஆனால், இன்னும் அவருக்கு வெண்டிலேட்டா், எக்மோ கருவிகள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்பிபி நுரையீரல் செயல்பாடு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதால் வெண்டிலேட்டர் உதவி தேவையிருக்காது எனக் கருதிய நிலையில் அதனை இப்போது நீக்கும் அளவுக்கு நுரையீரல் சீரடையவில்லை. அதற்கு இன்னும் அதிக நாட்கள் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் எஸ்பிபிக்கு நுரையீரல் மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகிறது. இதற்காக அரசு மூலம் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வந்துக்கொண்டிருகின்றன.

You'r reading எஸ்பிபிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை..? டாக்டர்கள் புதிய திட்டம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கேரளாவில் விரைவில் மதுபார்களை திறக்க முடிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்