போதை மருந்து விவகாரத்தில் கைதான பிரபல நடிகைக்கு ஜாமீன் மறுப்பு.. போதை பொருளுக்கு கிரெடிட் கார்டில் பணம் செலுத்தியது அம்பலம்..

Court on Friday rejected Rhea Chakraborty and Showik Chakrabortys bail pleas.

தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் அவருக்குப் போதை மருந்து கொடுத்ததாக அவரது காதலியும் நடிகையுமான நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது தம்பி ஷோயிக் ஆகியோரை போதை தடுப்பு போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மேலும் சாமுவேல் மிராண்டா, தீபேஷ் சாவந்த், ஜைத் விலாட்ரா, பசித் பரிஹார் ஆகியோரும் இந்த விவகாரத்தில் கைதாகினர்.

ரியா சக்ரவர்த்தி மற்றும் தம்பி ஷோயிக் கைதான மற்றவர்களும் மனுவை மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை கோர்ட் இன்று (வெள்ளிக்கிழமை) நிராகரித்தது. ரியா செப்டம்பர் 22 வரை மும்பையின் பைகுல்லா சிறையில் தொடர்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அடுத்த வாரம் ரியா முடிவு செய்வார். மும்பை ஐகோர்ட்டுக்கு ஜாமீன் கேட்டு மனு செய்யலாம் என அவரது வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே கூறினார்.

முன்னதாக ரியாவிடம் போதை தடுப்பு அதிகாரிகள் மூன்று நாட்கள் விசாரித்த பின்னர், சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு போதைப்பொருள் ஏற்பாடு செய்ததாக ரியா கைது செய்யப்பட்டார். ரியாவின் சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி, சுஷாந்தின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா மற்றும் ஊழியர்கள் தீபேஷ் சாவந்த் ஆகியோரையும் அதிகார்கள் கைது செய்தனர்.

ரியா சக்ரபோர்த்தி சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு போதைப்பொருள் ஏற்பாடு செய்ததாக ஒப்புக் கொண்டதாக என்சிபி கூறிய நிலையில், நடிகை தனது ஜாமீன் மனுவில் தான் நிரபராதி என்று கூறிய தோடு, இந்த வழக்கில் என்சிபி தன்னை "பொய்யாகச் சம்பந்தப்படுத்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.ஆனால் கிரெடிட் கார்டுகளைப் பயன் படுத்தி சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வீட்டிற்கு வழங்கப்பட்ட போதைப் பொருட்களுக்கு ரியா சக்ரபோர்த்தி பணம் தந்ததும் விசாரணையின் போது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

You'r reading போதை மருந்து விவகாரத்தில் கைதான பிரபல நடிகைக்கு ஜாமீன் மறுப்பு.. போதை பொருளுக்கு கிரெடிட் கார்டில் பணம் செலுத்தியது அம்பலம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சாம்சங் கேலக்ஸி எம்51: செப்டம்பர் 18 முதல் விற்பனை - விவோ வி19க்கு போட்டியா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்