ஜெயலலிதா படத்துக்கு தடைகோரிய வழக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு..

No Stay Granted for Jayalaithas Queen web series and Thlaivi Movie

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து குயின் என்ற வெப் தொடரை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். அதுபோல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து தலைவி என்ற படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இப்படம் இந்தியிலும் ஜெயா என்ற பெயரில் உருவாகிறது. இதற்கு தடை கேட்டு தீபா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


இதனால் ஜெயலலிதா வாழ்க்கை கதை என்று அறிவிக்காமல் குயின் முதல் பாகம் தொடர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
இந்நிலையில் தலைவி படத்தையும், குயின் இணையதள தொடரையும் தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், திரையிடவும் தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெய குமாரின் மகள் ஜெ.தீபா சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்த வழக்கு மீண்டும் விசாரனைக்கு வந்தது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிமன்றம், கவுதம் மேனன் தனது இணையதள தொடரில் தீபா குறித்து எந்த கதாபாத்திரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படை யில் குயின் தொடருக்கு தடை விதிக்க முடியாது. தலைவி படத்தில் முழுக்க முழுக்க இது கற்பனை கதாபாத்திரம் மட்டுமே என்று குறிப்பிடுவதால் அதற்கும் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

You'r reading ஜெயலலிதா படத்துக்கு தடைகோரிய வழக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிறுநீரக செயலிழப்பு ஏன் நேரிடுகிறது? எப்படி தவிர்க்கலாம்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்