உடைந்த இதயத்துடன் மும்பை யை விட்டு செல்கிறேன் - கங்கனா ரனாவத்

Actress kangana Ranut leaves from mumbai

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் வாரிசு நடிகர், நடிகைகளை பற்றி புகார் கூறிய கங்கனா அவர்கள் செய்த அவமதிப்பால்தான் சுஷாந்த் மனம் உடைந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார் என்றார். மேலும் பாலிவுட்டில் போதை பொருள் உபயோகம் உள்ளது என்று குற்றச் சாட்டு சுமத்தினார். இந்நிலையில் திடீரென்று மகாராஷ்டிரா ஆளும் சிவசேனா மீது பாய்ந்தார். பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறினார். மும்பை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் போல் உள்ளது என்றார்.

கங்கனாவின் இந்த பேச்சு ஆளும் கட்சி யினரையும் கோபத்தில் ஆழ்த்தியது. அவருக்கு எதிராக சிவசேனா கட்சி மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித் தனர். பாஜவுக்கு ஆதரவாக கங்கனா பேசுகிறார் என்றும் கூறினர். மனாலி யில் தங்கி இருக்கும் கங்கனா அங்கே யே இருப்பது நல்லது. அவர் மும்பை வந்தால் மும்பை மக்கள் அவரை நிற்க வைத்து கேள்வி கேட்பார் கள் என எச்சரித்தனர்.


இதையடுத்து தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட் டிருக்கிறது எனக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று மத்திய பா ஜ அரசிடம் கங்கனா கேட்க அவருக்கு மத்திய உள்துறை அமைச் சகம் ஒய் பிளஸ் கமாண்டோ பாது காப்பு அளித்தது, கமாண்டோ பாதுகாப் புடன் மனாலியிருந்து கங்கனா மும்பை வந்தார். விமான நிலையத்தில் சிவ சேனா கட்சியினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உருவ பொம்மையை எரித்தனர். கங்கனாவின் உருவப் படத் தை துடைப்பத்தால் அடித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். மேலும் கங்கனா தனது வீட்டில் மாநகராட்சி அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டியிருப்பதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் விட்டு அதை இடித்தனர். அதற்கு கங்கனா தரப்பில் கோர்ட்டில் தடை பெறப்பட்டது.


மும்பை வந்த கங்கனா தனது வீட்டில் இடிக்கப்பட்ட பகுதிகளை பார்வை யிட்டு ஜனநாயகம் செத்துவிட்டது என மெசேஜ் போட்டதுடன் தினமும் ஒரு தாக்குதலை அரசு மீது நடத்தி வந்தார். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே மீது நேரடியாக குற்றச்சாட்டு சொன்னார் கங்கனா. இது அரசுடனான முதலை அதிகரித்தது. அடுத்த தேர்தலில் பாஜ வின் நட்சத்திர பேச்சாளராக கங்கனா இருப்பார் என்று சிவசேனாவினர் கூறத் தொடங்கினர்.


இதற்கிடையில் தன் வீட்டில் வாரம் தங்கி இருந்த கங்கனா, போதை மருந்து பயன்படுத்தியதாக அவர் பேசிய வீடி யோ இரண்டு தினங்களுக்கு முன் வீடியோ ஒன்று வைரலானது. இதை யடுத்து அவரிடம் போதை தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்த வேண் டும் என்று கோரிக்கை எழுந்தது. அரசும் அதற்கு ஒப்புதல் அளித்தது.


அரசை எதிர்த்த கங்கனா மீது கடுமை யான போதை மருந்து குற்றச்சாட்டுகள் பாயும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென்று இன்று மும்பையிலிருந்து சொந்த ஊரான மனாலிக்கு கமாண்டோ படை பாதுகாப்புடன் புறப்பட்டு சென் றார். உடைந்த இதயத்துடன் மும்பை யை விட்டு செல்கிறேன் கங்கனா தெரிவித்திருக்கிறார். மும்பையிருந்து சண்டிகர் விமான நிலையம் சென்றவர் அங்கிருந்து மனாலி சென்றார்.

You'r reading உடைந்த இதயத்துடன் மும்பை யை விட்டு செல்கிறேன் - கங்கனா ரனாவத் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா ஊரடங்கால் உயிரிழந்த தொழிலாளர்கள்.. அரசிடம் புள்ளிவிவரம் இல்லை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்