எஸ்பி.பாலசுப்ரமணியம் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து உணவு சாப்பிடுகிறார்..

SPB Is Stable and Active : Charan New Message

திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். அவரது உடல்நிலை மோசமானது. அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவி உதவியுடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சர்வதேச டாக்டர்கள் ஆலோசனை பெற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போதைய உடல்நிலை சீராக உள்ளது.


நீண்ட சிகிச்சைக்கு பிறகு எஸ்பி உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற் றம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு கொரோனா தொற்று நீங்கியது. பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படு கிறது. அவருக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை எதுவும் செய்யவில்லை என சமீபத்தில் எஸ்பிபி மகன் சரண் தெரிவித்திருந்தார். நான்கு நாட்களுக்கு பிறகு இன்று சரண் தந்தையின் உடல் நிலை பற்றி வீடியோ வெளியிட்டி ருக்கிறார்.



அதில் அவர் கூறியதாவது:
எல்லோருக்கும் வணக்கம் எனது தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது நுறையீரலில் குணம் ஏற்பட்டு வரு கிறது அதனை எக்ஸ்ரே மூலம் காண முடிந்தது. அவரை எழுந்து அமரச் சொன்னபோது அவரால் படுக்கையிலி ருந்து எழுந்து 15 முதல் 20 நிமிடம் வரை உட்கார முடிகிறது. வாய் வழியாக உணவு உட்கொள்ள முடிகிறது. பிசியோதெரப்பி சிகிசையில் சுறுசுறுப்புடன் பங்கேற்கிறார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. எல்லாம் நல்லவிதமாக இருக்கிறது.
இவ்வாறு எஸ்பி.சரண் கூறினார்.

You'r reading எஸ்பி.பாலசுப்ரமணியம் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து உணவு சாப்பிடுகிறார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இரண்டாவது முறையாக சென்னை ஐஐடி முதலிடம் !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்