கீர்த்தி சுரேஷுடன் இணைந்த சமந்தா: நடிகை சாவித்ரி பயோபிக் அப்டேட்!

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான 'நடிகையர் திலகம்' திரைப்படத்தில் நடிகை சமந்தாவும் இணைந்து நடித்துள்ளார்.

தென்னிந்திய சினிமா உலகில் 1960 காலகட்டங்களில் புகழின் உச்சத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் நடிகை சாவித்ரி. இவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படம் 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் நடிகை சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இத்திரைப்படம் இம்மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், படத்தின் விஃப்எக்ஸ் வேலைகள் நிறைவடையாததால் மார்ச் மாதம் இத்திரைப்படம் ரிலீஸ் ஆகாது என இப்படத்தின் இயக்குநர் நாகு அஸ்வின் அறிவித்துள்ளார். நடிகை சாவித்ரியின் திரைப்பட வாழ்வும் சொந்த வாழ்வும் இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தெலுங்குவில் இத்திரைப்படம் 'மஹாநதி' என்ற பெயரில் தயாராகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகை சமந்தாவும் உள்ளார். ஒரு பத்திரிகையாளராக இப்படத்தில் சமந்தா தோன்றுகிறார். மேலும் ஜெமினி கனேசனாக நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading கீர்த்தி சுரேஷுடன் இணைந்த சமந்தா: நடிகை சாவித்ரி பயோபிக் அப்டேட்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமணை அறிக்கை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்