கார்த்தி படத்தில் நடித்த நடிகையின் தந்தைக்கு பக்கவாதம் தாக்கியதில் மூளையில் ஆபரேஷன்..

Actress Akansh Puri Father admitted in hospital for brain operation

தமிழில் கார்த்தி, அனுஷ்கா நடித்த படம் அலெக்ஸ் பாண்டியன் . இதில் சந்தானத்தின் 3 தங்கைகளில் ஒருவராக நடித்திருந்தவர் அகன்ஷா புரி. விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான ஆக்‌ஷன் என்ற படத்திலும் மேலும் சில தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களிலும் அகன்ஷா புரி நடித்தார். இந்தி டிவி சீரியல்களில் நடிக்கும் இவர் இந்தியில் நடக்கும் பிக்பாஸ் ஷோவிலும் பங்கேற்றிருக்கிறார்.

அகன்ஷா புரியின் தந்தை இந்தூரில் வசித்து வருகிறார். அவருக்கு திடீரென்று பக்கவாதம் நோய் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். உடனடியாக மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறிய நிலையில் தாமதம் இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளச் சம்மதித்தார் அகன்ஷா. ஆபரேஷன் வெற்றிகரமாக அமைந்தது.

இது அக்‌ஷாவுக்கு சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதுபற்றி அகன்ஷா கூறும்போது,எனக்கு வாழ்கையில் சக்தியையும் நம்பிக்கையையும் தருபவராகவும், என்னுடைய சூப்பர் மேனாகவும் இருப்பவர் என் தந்தைதான் என்றார்.அகன்ஷா புரி இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மஹிர சர்மா என்பவரைக் காதலித்தார். பின்னர் அவருடன் பிரேக் அப் ஆனது.

You'r reading கார்த்தி படத்தில் நடித்த நடிகையின் தந்தைக்கு பக்கவாதம் தாக்கியதில் மூளையில் ஆபரேஷன்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒன்பிளஸ் புதிய செயலி: விரைவில் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்