பாடகர் எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது வழங்க முதல்வர் கடிதம் ..

Bharath Rathna For Singer SP Balasuramaniyam :A P Chief Minister Letter To Prime Minister

பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல் நலமில்லாமல் கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார்.அவருக்கு வயது 74.கடந்த 50 ஆண்டுகளில் 45ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய எஸ்பிபி 6 முறை தேசிய விருது வென்றிருக்கிறார். மறைந்த எஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று திரையுலகினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாரத பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் எஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-ஆந்திர மாநிலம் நெல்லூரில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்தது எங்களின் அதிர்ஷ்டம். கடந்த வெள்ளிக்கிழமை அவர் சொர்க்கம் அடைந்தார்
அவரது மறைவு இந்தியா வில் உள்ள ரசிகர்களை மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் மனங்களைப் பாதித்துள்ளது .50 ஆண்டுக்கும் மேலாகத் திரைப்பட பாடகராக இருந்திருக்கிறார்.தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்படப் பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்திய அரசின் சிவிலியன் விருதான பத்மஸ்ரீ (2001) மற்றும் பத்மபூஷன் (2011) ஆகிய விருதுகள் உள்படப் பல மத்திய மற்றும் மாநில அரசுகளின் விருதுகள், திரையுலகின் முக்கிய விருதுகள் பெற்றுள்ளார்.

திரையுலகில் தனது பெரும்பணியை 50 ஆண்டுகளாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆற்றியிருக்கிறார். லதா மங்கேஷ்கர், சுப்புலட்சுமி பூபன் ஹசாரிகா, பீம்சென் ஜோஷி போன்றோர்களுக்கு அளித்தது போல் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கும் இந்திய அரசின் உயர்ந்த விருதான 'பாரத ரத்னா' விருது வழங்கவேண்டும்.

இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி கடிதத்தில் கூறி உள்ளார்.

You'r reading பாடகர் எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது வழங்க முதல்வர் கடிதம் .. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்