விரலில் கொப்புளம் வெடிக்க கதை எழுதிய பிரபல இயக்குனர்.. விடாப்பிடியாக அடுத்த கதை எழுதுகிறார்..

Thangerbachan Not In part of Marumalarchi 2 Movie

கடந்த 1998ம் ஆண்டு பாரதி இயக்கத் தில் மறுமலர்ச்சி என்ற படம் திரைக்கு வந்தது. இதில் மம்மூட்டி, தேவயானி ஜோடியாக நடித்திருந்தனர். இந்நிலை யில் மறுமலர்ச்சி 2ம் பாகம் பற்றி உறுதி யான அறிவிப்பும் இதுவரை வரவில் லை. ஆனாலும் இயக்குனர் நடிகர் தங்கர்பச்சான் மறுமலர்ச்சி2 படத்தில் இணைந்துள்ளதாக கிசுகிசு பரவியது. இது குறித்து தங்கர்பச்சான் விளக்கம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட் டுள்ளார். அப்போது, தனி இடத்தில் அமர்ந்து பேனா பிடித்து கதை எழுதிய தில் விரல்களில் கொப்புளம் வந்துவிட்டது. ஆனால் விடாமல் 2வது கதை எழுதுகிறேன் என்றார். அறிக்கையில் அதில் கூறியிருப்பதாவது:


மறுமலர்ச்சி படம் பாகம்2வில் நான் வேலை செய்யப்போவதாக தவறான தகவல் வந்துள்ளது. அது முற்றிலும் தவறான தகவல். அப்படி என்னிடம் யாரும் பேசவில்லை. நான் கடந்த ஒரு மாதமாக வெளியூரில் அமைதியான சூழலில் கதை எழுதி வருகிறேன்,
ஆறு மாத காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து சிந்தனை நசுக்கப் பட்டு தவித்திருந்தேன். இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்கள் இரவும் பகலும் ஓய்வின்றி இடைவிடாமல் எந்நாளும் எக்காலத் திற்கும் பேசப் படும் எனது அடுத்த படத்திற்கான ஒரு சிறந்த திரைக்கதையை தற்போது எழுதி முடித்தேன்.
தொடர்ந்து பேனா பிடித்து எழுதியதில் விரலில் கொப்புளம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் மற்றொரு சிறந்த படைப்புக்கான திரைக்கதையை உருவாக்கம் செய்ய இருக்கிறேன்.


முழுமையான இரண்டு வாரங்களில் இடைஞ்சல் இல்லாத தூய்மையான காற்று.. தூய்மையான நீர்.. இயற்கை உணவு இவைகளுடன் கூடிய சூழலில் இதை எழுதி முடித்திருக்கிறேன்.
கொரோனா காலத்தில் எனக்கான பணி களில் பல முன்னேற்றத் தடைகள் இருந் தாலும் இரண்டு சிறந்த திரைக்கதைகள் கிடைக்க உள்ளன எனும் மகிழ்ச்சி அனைத்தையும் மறக்கச் செய்கின்றன!.
இவ்வாறு தங்கர் பச்சான் கூறி உள்ளார்.
தங்கர் பச்சான் பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் இயக்கியும் உள்ளார்.

You'r reading விரலில் கொப்புளம் வெடிக்க கதை எழுதிய பிரபல இயக்குனர்.. விடாப்பிடியாக அடுத்த கதை எழுதுகிறார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா.. சுகாதார எமர்ஜென்சியை அறிவிக்க ஐஎம்ஏ கோரிக்கை..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்