ஆயிரம் கோடி பட்ஜெட்டில் அம்பானி தயாரிக்கும் படம்.. ஹீரோ யார் தெரியுமா ?

ஆயிரம் கோடி பட்ஜெட்டில், மகாபாரத கதையை தத்ரூபமாக அனிமேஷன் காட்சிகளுடன் தயாரிக்க உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இதில் நடிக்கப்போகும் நடிகர் யார் என்பது குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட் திரையுலகில் நம்பர் நடிகராக மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ளவர் அமீர்கான். இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்துவிடும். இந்நிலையில், அமீர்கானுக்கு கனவு திரைப்படம் ஒன்று உள்ளது. உலக தரத்தில் அனிமேஷன் காட்சிகளுடன் மகாபாரத கதையை தத்ரூபமாக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே அமீர்கானின் கனவும், விருப்பமும்.

தொடர்ந்து, இந்த படத்தை தயாரிக்க ஒரு பெரிய நிறுவனம் ஒன்று ரூ.500 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க முன்வந்தது. இந்நிலையில், அமீர்கானின் கனவை நிறைவேற்றும் வகையில் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்க முகேஷ் அம்பானி முன்வந்துள்ளார். இதனால், அமீர்கான் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஆயிரம் கோடி பட்ஜெட்டில் அம்பானி தயாரிக்கும் படம்.. ஹீரோ யார் தெரியுமா ? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 30-ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை - நீர்வளத்துறை செயலாளர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்