சின்னத் திரைக்கு திடீர் தலைவரான காமெடி நடிகர் ..

Actor Manobala Elected As Chinna thirai President

சினிமா நடிகர்களுக்கென்று தென்னிந்திய நடிகர் சங்கம் எம்ஜிஆர், சிவாஜி காலத்திலிருந்து இயங்கி வருகிறது. தற்போது அதனை அரசு தனி அதிகாரி நிர்வகித்து வருகிறார். சங்கத்துக்குத் தேர்தல் நடத்துவது பற்றி கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. சின்னத்திரை நடிகர்களுக்கும் அதாவது டிவிக்கும் தனியாக சின்னத்திரை நடிகர்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் காமெடி நடிகரும் திரைப்பட இயக்குனருமான மனோ பாலா ஏகமானதாகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைச் சங்க வெளியிட்டுள்ள செய்தியில் கூறி உள்ளது. இச்சங்கத்தின் பொதுச் செயலாளராக ரிஷி, பொருளாளராக ஜெயந்த் உள்ளனர்.

ஏற்கனவே தலைவர் பதவியில் இருந்து வந்த ரவிவர்மா என்பவர் மீது புகார்கள் வந்ததையடுத்து அவர் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாகத்தான் நடிகர் மனோ பாலா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சின்னதிரை சங்கத் தலைவராக மனோ பாலா தேர்வானதற்கு அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.நடிகர் மனோபாலா தற்போது காமெடி நடிகராக நடித்து வந்தாலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் உள்ளிட்ட முக்கிய படங்களை இயக்கியவர்.

ரஜினிகாந்த், ராதிகா நடித்த ஊர்க்காவலன் என்ற படத்தை 1987ம் ஆண்டு இயக்கினார். அதேபோல் விஜயகாந்த், சுஷாசினி நடித்த என் புருஷந்தான் எனக்கு மட்டும் தான் படத்தை 1989ம் ஆண்டு இயக்கினர். மேலும் தென்றல் சுடும், மல்லு வேட்டி மைனர் உள்ளிட்ட சுமார் 20 படங்கள் இயக்கி இருக்கிறார். புன்னகை, 777, மாயா போன்ற டிவி சீரியல்கலும் இவர் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் காமெடி நடிகராக சுமார் 100 படங்களில் நடித்துள்ளதுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

You'r reading சின்னத் திரைக்கு திடீர் தலைவரான காமெடி நடிகர் .. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எடையை குறைக்க உதவும் கொண்டைக்கடலை சாலட்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்