சர்க்கஸ் சாகசம் செய்த நடிகையை கண்டு வியப்பு.. இவரால் எப்படி இப்படி செய்ய முடிந்தது?

Actress Yashika Fitness Video gives Shock

உலக நாயகன் கமல்ஹாசனின் பிக் பாஸ் சீசன் 2வில் பங்கேற்று புகழ் பெற்ற நடிகை யாஷிகா ஆனந்த், தொடர்ந்து படங்களில் நடித்து தன்னை தக்க வைத்துக்கொண்டிருப்பதுடன் அதை விட அதிகமாக தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி படங்கள், சேலை கட்டிய அம்சமான படங்கள் பகிர்ந்து ரசிகர்ளையும் ஈர்த்து வருகிறார். தனது உடல் எடை பற்றி அவ்வப்போது வரும் கமென்ட்டை கவனித்தவர் கடுமையான பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்தார்.


உடற்பயிற்சி செய்வதை தனது வழக்கமான ஒரு கடமையாக வைத்திருக்கிறார் யாஷிகா. சில மாதங்களுக்கு முன்பு, தனது உடல் தோற்றத்தில் எடை குறைந்து சிக்கென மாறிய தோற்றத்தைக் காட்ட ஒரு படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். அது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது யாரு யாஷிகாவா? ஏதாவது போட்டோ ஷாப் செய்து உடல் தோற்றத்தை மாற்றிவிட்டாரா என்று சிலர் சந்தேகம் கிளப்பினார்கள்.
கடந்த மார்ச் மாதத்தில் லாக்டவுன் தொடங்கியதிலிருந்து நடிகை தனது ஓய்வு நேரத்தை உடற்பயிற்சிக்கவே அதிக நேரம் செலவழித்து வருவது போல் தெரிகிறது.
தற்போது அவர் தனது ஒர்க் அவுட்டின் போது உடல் நெகிழ்வுத்தன்மையை விளக்கும் வகையில் சர்க்கஸ் சாகசம் செய்வதுபோல் நின்றபடி மெதுவாக பின்புறமாக வளைந்து தரையை தொட்டு பலரையும் மூக்கை விரல்களால் தொட வைத்து ஆச்சரியமூட்டி இருக்கிறார்.
பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் மிகவும் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவராக இருந்த யாஷிகா ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்திருக்கிறார். அடுத்து அவரது நடிப்பில் மஹத் ராகவேந்திராவுடன் நடித்துள்ள இவன் தான் உத்தமன் அமானுஷ்ய திகில் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை மேக்வென் இயக்கி உள்ளனர். ஆரவுடன் ராஜா பீமா படத்திலும் அவர் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளாராம். நடிகை யாஷிகா 2016 ஆம் ஆண்டில் அறிமுகமானார்.

அவரது முதல் இரண்டு படங்களில் ஜீவா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த கவலை வேண்டாம் மற்றும் ரகுமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த துருவங்கள் பதினாறு, விஜய தெவரகொண்டா நடித்த நோட்டா ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும், அவர் தன்னை தக்கவைத்தார். பின்னர், சந்தோஷ் பி ஜெயக்குமாரின் அடல்ட் திகில் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் இனிமேல் அடல்ட் படங்களில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார் யாஷிகா.

You'r reading சர்க்கஸ் சாகசம் செய்த நடிகையை கண்டு வியப்பு.. இவரால் எப்படி இப்படி செய்ய முடிந்தது? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்க்க பயப்படும் நயன்தாரா காதல் இயக்குனர்.. என்ன நடந்தது தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்