மருத்துவமனையிலிருந்து கொரோனா தொற்று குணம் ஆகாமல் வீடு திரும்பிய பிரபல நடிகை..

Actresss Tamanna back home with COVI19 Positive for home quarantine

நடிகை தமன்னா சில தங்களுக்கு முன் ஐதராபாத்தில் நடந்த வெப் சீரிஸ் தொடரில் நடிக்க வந்தார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை செய்துக் கொண்டார். அதில் அவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்ந்தார். 2 நாட்கள் அங்கு சிகிச்சை பெற்றும் வந்தவர் வீட்டு ஞாபகத்திலேயே இருந்தார்.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள எண்ணினார். அதனை டாடர்களிடம் தெரிவித்தபோது அவர் வீட்டில் தனிமைப்படுத்தி இருக்கக் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து கொரோனா தொற்றுடனே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் தமன்னா.


இதுபற்றி தமன்னா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். வரும் வாரங்களில் நான் கொரொனா தொற்றிலிருந்து மீண்டு விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. ரசிகர்கள் நான் குணமடைய வேண்டி பிரார்த்தனைகள் செய்ததுடன் விருப்பம் தெரிவித்து வாழ்த்து தெரிவித்தனர் அவர்களுக்கு என் நன்றி.
நானும் எனது அணியும் செட்டில் மிகவும் ஒழுக்கமாக இருந்தபோதிலும், துரதிர்ஷ்டவசமாகக் கடந்த வாரம் லேசான காய்ச்சலுக்கு ஆளானேன். கட்டாய சோதனைகளை மேற்கொண்ட பிறகு, நான் கோவிட் -19 பாசிட்டிவ் எனக் கண்டறியப்பட்டேன். ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டேன் பிறகு மருத்துவ நிபுணர்களின் பராமரிப்பில் இருந்தபின் நான் இப்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார் ஆகிறேன்.இவ்வாறு தமன்னா கூறினார்.

நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் தமன்னா விரைந்து குணம் அடைய விருப்பம் தெரிவித்து வாழ்த்து பகிர்ந்தனர்.முன்னதாக நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், விஷால் ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன், நிக்கி கல்ராணி போன்றவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading மருத்துவமனையிலிருந்து கொரோனா தொற்று குணம் ஆகாமல் வீடு திரும்பிய பிரபல நடிகை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மனைவியுடன் கொஞ்ச முடியவில்லை தடையாக இருந்த 5 வயது மகனை தந்தை என்ன செய்தார் தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்