தளபதி நடிகரின் தந்தையும் பா.ஜ கவில் ஐக்கியமா? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு..

Actor Vijay Father Joining BJP?

தமிழகச் சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டில் நடக்க உள்ளது. இப்போதே அரசியல் கட்சிகள் தங்களின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று தீர்மானிக்க ஜரூராக பணிகள் நடக்கிறது. அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்து அக்கட்சி அறிவித்துள்ளது.பாரதிய ஜனதா கட்சி தற்போது தமிழக அரசியலில் தங்களுக்கென இடத்தை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சினிமா பிரபலங்களை வளைத்துப்போடுவதில் தீவிரமாக இறங்கி உள்ளது. அதில் முதல் நபராக நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்திருக்கிறார். அவரை தொடர்ந்து தற்போது தளபதி நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ. சந்திரசேகர் பாஜகவில் சேரவிருப்பதாக பெயர் அடிபட்டு வருகிறது. இது விஜய் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜ.க தரப்பில் எச் ராஜா போன்ற ஒரு சிலர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் பாஜவில் எப்படிச் சேர்வார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அக்கட்சியில் சேர்வதாகக் கூறுவது வதந்தி, யார், எதற்காக இப்படி வதந்தி கிளப்புகிறார்கள் என எனக்குத் தெரியவில்லை என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறி உள்ளார்.

விஜய் ரசிகர்கள் விஜயை அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்து அவ்வப்போது போஸ்டர்கள் ஒட்டுகின்றனர். அவரும் அவ்வப்போது அரசியல் கருத்துக்கள் வெளியிட்டுப் பரபரப்பு ஏற்படுத்துகிறார். விஜய் தனிக் கட்சி தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சு உள்ளது.

You'r reading தளபதி நடிகரின் தந்தையும் பா.ஜ கவில் ஐக்கியமா? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சூடான.. சுவையான.. மொறு மொறு மசால் வடை ; இப்படி செஞ்சா சுவை அள்ளும்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்