மண்டப சொத்து வரி மீது கோர்ட் உத்தரவு: ரஜினி திடீர் கருத்து.. வரி கட்டியாச்சா, இல்லையா?

Court Order for Kalyana Mandabam Property Tax: Rajinikanth Opninion

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது.இந்த மண்டபத்துக்குச் சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தைச் செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் மாநகராட்சி அனுப்பிய சொத்து வரிக்கான நோட்டீசை ரத்து செய்யக் கோரி ராகவேந்திரா திருமண மண்டப உரிமையாளரான நடிகர் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவில் கூறியது:
கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மத்திய, மாநில அரசுகள் விதித்த பொது முடக்கம் காரணமாக மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்ததால் சொத்து வரியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். கொரோனா கால வரி குறைப்புக்கு ராகவேந்திரா மண்டபத்திற்கு தகுதி உள்ளது.இவ்வாறு மனுவில் ரஜினி காந்த் கூறியிருந்தார்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி உத்தரவிடும்போது,மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். அத்துடன், அபராதம் விதித்து வழக்கைத் தள்ளுபடி செய்யப் போவதாகவும் எச்சரித்ததுடன் வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று உத்தரவிட்டார்.இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பு வழக்கறிஞர் கூறினார். வழக்கைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மனு அளிக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார்.

உயர்நீதி மன்றம் தனது மனுவை தள்ளுபடி செய்ததையடுத்து ரஜினிகாந்த் தனது தவறை உணர்ந்து ஒரு டிவிட்டர் மெசேஜ் வெளியிட்டார். அதில், ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரத்தில் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்து இருக்க வேண்டும். தவறை தவிர்த்து இருக்கலாம். அனுபவமே பாடம் என டிவிட்டரில் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.மேலும் சென்னை மாநகராட்சியில் சொத்து வரி 6.5 லட்சத்தை ரஜினிகாந்த் செலுத்தினார்.

You'r reading மண்டப சொத்து வரி மீது கோர்ட் உத்தரவு: ரஜினி திடீர் கருத்து.. வரி கட்டியாச்சா, இல்லையா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குற்றால அருவிகளில் கொட்டும் வெள்ளம்... குளிக்கத்தான் ஆளில்லை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்