ஊரில் பேய் மழை கொட்டுவதால் கதறும் பிரபல ஹீரோ..

Vijay Devarakonda Feels Bad For Being Away From Hyd

மழை வந்தால் தான் ஊரில் தண்ணீர் பஞ்சம் தீரும் அதுவே பேய் மழையாக வந்து ஊரையே வெள்ள நீர் அடித்துச் சென்றால் கதறாமல் என்ன செய்வது. தமிழகத்தில் மழைக் காலம் தொடங்கிவிட்டாலும் இன்னும் தீவிரம் அடையவில்லை. ஆனால் தெலங்கானா மாவட்டத்தில் பேய் மழை கொட்டுகிறது. வீடுகள், ஆடு மாடுகளுடன், பாத்திர பண்டங்கள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது.

மனிதர்களும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுவரை 50 ஆயிரம் வீடுகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது, 50க் மேற்பட்டவர்களைக் காணவில்லை. 20க்கும் மேற்பட்டவர்கள் பலி எனச் செய்திகள் வந்துக் கொண்டிருக்கிறது. இந்த கொடுமையை கண்டு கதறுகிறார் பிரபல நடிகர்.

தமிழில் நோட்டா. தெலுங்கில் கீதா கோவிந்தம் , அர்ஜூன் ரெட்டி, டியர் காம்ரேட் போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருப்பவர் விஜய் தேவரகொண்டா. ஐதாராபாத்தில் வசிக்கும் அவர் தற்போது ஐரோப்பிய நாடுகளில் படப் பிடிப்புக்காகச் சென்றிருக்கிறார். அங்கிருக்கும் அவர் ஐதராபாத்தில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ள ஆபத்து பற்றியும் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது பற்றியும் அறிந்து ஒரு கதறல் மெசேஜ் பகிர்ந்திருக்கிறார்.
அதில்,ஐதராபாத்தில் நடந்திருக்கும் இந்த சோகம் இத்தருணத்தில் என்னை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. எல்லோரையும் காப்பாற்ற வேண்டி பிரார்தனை செய்து வருகிறேன்.

உங்களின் சோகத்தில் பங்கேற்று என்னால் இயன்ற உதவியைச் செய்ய விரைவில் புறப்பட்டு வந்துவிடுவேன். என்னுடைய அன்பையும் பலத்தையும் உங்களுக்குத் துணையாக அனுப்பி வைக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.ஐதராபாத் வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களுக்கு நடிகை சமந்தா தனது அறக்கட்டளை மூலமாக உணவு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மேலும் சில நட்சத்திரங்களும் உதவி வழங்க முன் வந்துள்ளனர்.

You'r reading ஊரில் பேய் மழை கொட்டுவதால் கதறும் பிரபல ஹீரோ.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொலை மிரட்டல் விடுத்த கைதி.. ஏற்க மறுத்த சிறை அதிகாரிகள்: 12 மணி நேரம் தவித்த போலீசார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்