விஜய் சேதுபதி படத்திலிருந்து பிரபல நடிகை திடீர் விலகல்.. வாய்ப்பை கைப்பற்றிய வேறு ஹீரோயின்..

Actress optout from Vijay sethupathi film

நடிகர் விஜய் சேதுபதி பற்றிய பரபரப்பு இன்னும் ஓயவில்லை. கடந்த 2 வாரமாக அவர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையாக உருவாகும் 800 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட விவகாரம் கடும் சர்ச்சையானது. திரையுலகினர் முதல் அரசியல் பிரமுகர்கள், தமிழ் பற்றாலர்கள் வரையிலும் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது விவாத மேடையாக மாறியது.

ஒரு வழியாக அந்த பிரச்சனைக்கு நேற்று முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. 800 படத்திலிருந்து சர்ச்சைகளைச் சுட்டிக்காட்டி அதிலிருந்து விஜய் சேதுபதியை விலகிக் கொள்ளும்படி முத்தையா முரளிதரனே கேட்டுக்கொள்ள அதை ஏற்று நன்றி, வணக்கம் சொல்லி அப்படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் துக்ளக் தர்பார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நடிக்க அதிதி ராவ் ஹைத்ரி நடிக்க ஒப்பந்தம் ஆனார். இவர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், சைக்கோ போன்ற படங்களில் நடித்தவர்.கொரோனா ஊரடங்கு காரணமாக துக்ளக் தர்பார் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. இதனால் அதிதியால் கொடுத்த கால்ஷீட் படி நடிக்க அழைப்பு வரவில்லை. அவர் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன. அதன்படி துக்ளக் தர்பார் படப் படப்பிடிப்பும் தொடங்கியது. ஆனால் ஏற்கனவே அதிதி தந்திருந்த கால்ஷீட் பயன்படுத்தப்படாத நிலையில் தற்போது வேறு படங்களுக்காக ஏற்கனவே கொடுத்த கால்ஷீட் காரணத்தால் மீண்டும் உடனடியாக அதிதியால் துக்ளக் தர்பார் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. இதைப் படக் குழுவிடம் அவர் தெரிவித்தார். இதையடுத்து அவருக்குப் பதிலாக ராசி கண்ணா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். துக்ளக் தர்பாரில் விஜய் சேதுபதியுடன் ஏற்கனவே சங்கத் தமிழன் படத்தில் இணைந்து நடித்திருந்தார். தற்போது துக்ளக் தர்பார் படப் பிடிப்பு தொடங்கி நடக்கிறது.

You'r reading விஜய் சேதுபதி படத்திலிருந்து பிரபல நடிகை திடீர் விலகல்.. வாய்ப்பை கைப்பற்றிய வேறு ஹீரோயின்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா காலத்தில் விரதம் இருக்கலாமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்