தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டியால் பரபரப்பு.. விஷால் போட்டியிடாதது ஏன்?

Producer Council President Post 3 Members File Namination

சென்னை உயர்நீதிமன்றத்தால்‌ நியமிக்கப்பட்ட தோ்தல்‌ அதிகாரி நீதியரசர்‌ எம்‌.ஜெயச்சந்திரன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை நடத்துக்கிறார். அதற்கான அறிவிப்பை ‌ ஏற்கனவே வெளியிட்டார். அதன்படி தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ 2020-2022ம்‌ ஆண்டிற்கான தோ்தல்‌ வருகிற நவம்பர்‌ மாதம்‌ 22ம்‌ தேதி (22.11.2020-ஞாயிற்றுக் கிழமை) அன்று சென்னை அடையாறு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌. ஜானகி கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி (சத்யா ஸ்டூடியோஸ்‌) வளாகத்தில்‌ நடைபெறவுள்ளது. 22.11.2020 அன்று காலை முதல் வாக்குப்பதிவும், அன்று இரவே வாக்குககள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

பழைய சத்யா ஸ்டுடியோ என அழைக்கப்படும் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடைபெறும். தயாரிப்பாளர் சங்கத்தில் 4,500 மேல் உறுப்பினர்கள் உள்ளனர். இருந்தாலும் 1,303 பேர் மட்டுமே வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் என பல்வேறு நடைமுறைகளை அறிவித்துள்ளார். தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 3 அணிகள் போட்டியிடுகின்றன. அதன் விவரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் நிர்வாகப் பொறுப்பிற்கு போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளவர்கள் பட்டியல்..

தலைவர் பதவி:
1.இராமசாமி @ முரளி
2.டி. ராஜேந்தர் 3. பி.எல். தேனப்பன்

துணை தலைவர்கள் பதவி:

1: கதிரேசன் 2:கே. முருகன் ( அடிதடி)
3: வி. மதியழகன்
4: பி. டி. செல்வகுமார்
5: ஆர். சிங்காரவேலன்
6: சிவசக்தி பாண்டியன்
7: ஆர்.கே. சுரேஷ்

செயலாளர்கள் பதவி:
1: மன்னன்
2: ஆர். இராதாகிருஷ்ணன்
3: கோட்டபடி ராஜேஷ்
4: கலைப்புலி ஜி. சேகர்
5: சுபாஷ் சந்திரபோஸ்

பொருளாளர் பதவி:
1: கே.ராஜன்
2: சந்திரபிரகஷ் ஜெயின்
3: ஜே. சதீஷ்குமார்

இவர்கள் தவிர செயற்குழு பொறுப்புக்கும் மனு தாக்கல் செய்துள்ளனர். இனி பிரச்சாரங்கள் களைகட்டும். ஏற்கனவே இச்சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்தார் விஷால். ஆனால் அவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டதையடுத்து அவரது தலையிலான குழுவை கலைத்துவிட்டு சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை அரசு நியமித்தது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் உள்ளது. இந்தமுறை நடக்கும் தேர்தலில் விஷால் போட்டியிடக்கூடும் என்ற தகவல் ஏற்கனவே வந்த நிலையில் அவர் இதுவரை மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. அதற்கான காரணமும் அவர் தரப்பிலிருந்து தரப்படவில்லை.

You'r reading தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டியால் பரபரப்பு.. விஷால் போட்டியிடாதது ஏன்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - என்னைக் கொல்ல செய்த சடங்கு : பீகார் பாஜக தலைவர் சுஷில் மோடி புகார்.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்