ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் இளையதளபதி

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனது 62வது படத்தில் நடிகர் விஜய் ஒரு பாடலை பாடவுள்ள தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இளையதளபதி விஜய், அவர் நடித்து வரும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாடிவிடுவார். ஆனால், இதுவரையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த அவரது படத்தில் விஜய் பாடவில்லை. மெர்சல் படத்தில் விஜயின் குரல் பாடலாக கண்டிப்பாக ஒலிக்கும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால், அதில் அவர் பாடதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில், ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில், விஜய் தனது 62வது படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் பாட இருக்கிறார். இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்ப்பார்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் இளையதளபதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொளத்தூர் நகைக்கடை கொள்ளை: நாதூராம், பத்தாராம் மீது குண்டர் சட்டம் பதிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்