எந்தத் தொகுதியில் போட்டி? கமல்ஹாசன் பேட்டி

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதன் சாராம்சம்.

பழி போடும், பழிவாங்கும் அரசியல் அல்ல எங்களுடையது; வழிகாட்டும் அரசியல்.
நேர்மை ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வியூகமாக இருக்கும்.ஊழலை அகற்ற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. நான் எங்குப் போட்டியிடுவேன் என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரிய வரும்.சட்டமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் கண்டிப்பாக ஒலிக்கும். எனது அரசியலமைப்பு சட்டத்தில் கை வைத்தால் நடப்பதே வேறு.மனுஸ்மிருதி நூல் பற்றிய விமர்சனம் தேவையற்றது. புழக்கத்தில் இல்லாத மனுஸ்மிருதி பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் ஆயுள் தண்டனை அளவுக்குச் சிறையில் இருந்துவிட்டார்கள்.ரஜினிக்கு அவர் உடல்நலன்தான் முக்கியம்; அரசியல் பிரவேசம் குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும்.வேல் யாத்திரைக்குத் தமிழக அரசு அனுமதி மறுத்தது வரவேற்கத்தக்கது; தமிழகத்துக்கு வேல் யாத்திரை வேண்டாம்; வேலைதான் வேண்டும்.சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 50% வாய்ப்பு கொடுக்கும் முயற்சியில் இருக்கிறோம்.மூன்றாவது கூட்டணி அமைந்துவிட்டது. சட்டப்பேரவையில் மக்கள் நீதி மையத்தின் குரல் நிச்சயம் ஒலிக்கும் -

You'r reading எந்தத் தொகுதியில் போட்டி? கமல்ஹாசன் பேட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பு ..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்