திரைப்பட விழா : விருது பெற்ற படங்களை வீட்டிலேயே பார்க்கலாம்

ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழாவில் பங்கு பெறும் திரைப்படங்களை வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் காண வழி செய்யப்பட்டுள்ளது

ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா நவம்பர் வரும் 13 ந் தேதி துவங்கி, 30–ந் தேதி முடிவடைகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த திரைப்படங்களை வீட்டில் இருந்தபடியே காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. euffindia.com என்ற வலைத்தளத்தில் இந்த திரைப்பட விழா படங்களைப் பார்க்கலாம்.ஐரோப்பிய யூனியன் நாடுகளின் விருது பெற்ற 42 திரைப்படங்கள் 36 மொழிகளில் ஆன்லைனில் திரையிடப்படுகிறது.இதில் 15 பெண் டைரக்டர்களின் திரைப்படங்களும் அடங்கும்.


இந்த விழாவில் 4 பிரிவுகளாக மொத்தம் 42 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. வித்தியாசமான கதைகள், பாரம்பரியங்கள், சரித்திரம், சாதனங்கள் பற்றிய திரைப்படங்கள் அனைவரையும் கவரும் என்று விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்த திரைப்பட விழாவில் 27 திரைப்படங்களில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோசியா, சைப்ரஸ், செசியா, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிதுனியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுக்கல், ரோமானியா, ஸ்லோவாக்கிய, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிஸ் நாடுகளின் ஐரோப்பிய சினிமா டுடே தலைப்பில் திரையிடப்படுகிறது.

You'r reading திரைப்பட விழா : விருது பெற்ற படங்களை வீட்டிலேயே பார்க்கலாம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இல்லத்தரசிகளுக்கு அடித்த தீபாவளி ஜாக்பாட்! தொடரும் தங்கத்தின் விலை வீழ்ச்சி! 12-11-2020

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்