விபத்தை ஏற்படுத்தி விட்டு எஸ்கேப்: கவிஞர் சினேகன் மீது வழக்கு

புதுக்கோட்டை அருகே மோட்டார் பைக்கில் வந்தவர் மீது காரில் மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கவிஞரும் மக்கள் நீதி மையம் கட்சியின் இளைஞரணி செயலாளர் பான சினேகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளர் கவிஞர் சினேகன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் திருமயம் காவல்துறையினர் வழக்கு பதிவு. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சவேரியார்புரத்தில் நேற்று முன்தினம் அருண்பாண்டியன் பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் பலத்த காயமடைந்த அருண்பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அருண்பாண்டியனின் புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை ஓட்டி வந்தது மக்கள் நீதி மையத்தின் இளைஞரணி செயலாளர் கவிஞர் சினேகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து கவிஞர் சினேகன் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்துதல் மற்றும் காயம் ஏற்படுத்துதல் ஆகிய செயல்களுக்காக இபிகோ 329 மற்றும் 279 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

You'r reading விபத்தை ஏற்படுத்தி விட்டு எஸ்கேப்: கவிஞர் சினேகன் மீது வழக்கு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெலிவரி பாயாக பணியாற்றும் ஒலிம்பிக் வீரர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்