தியேட்டருக்கு சென்று படம் பார்த்த ஹீரோ.. ரசிகர்களிடம் கோவிட் 19 பயத்தை போக்க..

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, சினிமா திரை அரங்குகள் கடந்த 7 மாதமாக மூடிக்கிடந்தன. புதிய படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கின பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது. தமிழ் தவிர இந்தியில் அமிதாப்பச்சன், சஞ்சய் தத் நடித்த படங்களும் ஒடிடிக்கு சென்றன. ஆனால் சில படங்கள் தியேட்டரில் வெளியாகக் காத்திருக்கின்றன.
கடந்த அக்டோபர் மாதம் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. மற்ற மாநிலங்களில் திறந்த போதும் தமிழகத்தில் திறக்கப்படாமலிருந்தது. நவம்பர் மாதம் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்க தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டன. சந்தானம் நடித்த பிஸ்கோத், சந்தோஷ் ஜெயகுமார் நடித்த இரண்டாம் குத்து, ரிஷி நடித்த மரிஜுவானா ஆகிய படங்கள் வெளியாகின. இப்படங்கள் 50 சதவீத டிக்கெட் எண்ணிக்கை மற்றும் கொரோனா விதிமுறைகளுடன் ஒடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் பார்வையாளர்கள் தொற்றுநோய்க்குப் பயந்து திரையரங்குகளுக்குச் செல்ல தயங்குகிறார்கள். பார்வையாளர்கள் இல்லாததால் சில தியேட்டர்களில் இரவுக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.ரசிகர்களின் பயத்தைப் போக்கப் பிரபல நடிகர் ஒருவர் தானே சினிமா தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார். அவர் இந்தி நடிகர் அமிர்கான். படம் பார்க்க தியேட்டருக்குச் சென்ற முதல் பிரபலம் இவர் தான். தில்ஜித் டோசன்ஜ், மனோஜ் பாஜ்பாய் மற்றும் பாத்திமா சனா ஷேக் நடித்த சூரஜ் பெ மங்கல் பாரிபடத்தை அவர் மும்பை தியேட்டரில் பார்த்தார்.

இதுகுறித்த உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்ட அமீர்கான் "சூரஜ் பெ மங்கல் பாரியை ஒரு சினிமா ஹாலில் பார்க்கும் வாய்ப்பு. பெரிய திரை அனுபவத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அது இவ்வளவு நாள் நிறைவேறியது.அமீர்கான் அடுத்து 'லால் சிங் சத்தா' படத்தில் நடிக்கிறார். இது ஹாலிவுட் படமான 'ஃபாரஸ்ட் கம்ப்' இன் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.தமிழகத்திலும் தியேட்ட்டரில் சென்று ரசிகர்கள் பயமில்லாமல் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்ட நடிகர்கள் முன்வருவார்களா என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

You'r reading தியேட்டருக்கு சென்று படம் பார்த்த ஹீரோ.. ரசிகர்களிடம் கோவிட் 19 பயத்தை போக்க.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காஷ்மீரில் என்கவுன்டர்.. 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்